
மறைந்த திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், பகுத்தறிவு குறித்துப் பேசி அரங்கை கலகலப் பாக்கினார்.
‘’பிக்பாக்கெட் சினிமா ஷூட்டிங்குல வழக்கம் போல கேமராவுக்கு தேங்காய் சுத்துனாங்க. அப்போது, ‘கொஞ்சம் தள்ளி நின்னு சுத்துங்கப்பா. புகை அடிச்சுட்டா லென்ஸ் சரியா வேலை செய்யாது’ என்று சொன்னார் வேலு பிரபாகரன்.
என்னடா.. ஒரு டைப்பா பேசுறார்னு நெனச்சு, ஒரு ஷார்ட்டுக்கு நடுவுல, என்ன பிரபாகர் சார்?னு கேட்டேன். அவர் அதுக்கு, ‘சார் கேமராவ கண்டுபிடிச்ச தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த ஊருல தென்னை மரமே கிடையாது சார். அவன் கண்டுபுடிச்சு அனுப்புனா இங்க தேங்காய சுத்துறாங்க சார்… ஏதாச்சும் பிளம்ஸோ, பேரிக்காயோ, ஆப்பிளோ சுத்துனா நியாயமிருக்கு சார் ’னு சொன்னார்.

நானும் யோசிச்சேன். போன வருசம்தான அந்தாளு பொறந்த ஊருக்கு போனோம். அங்க தென்னை மரமே இல்லையேனு நினைச்சு , சரியாத்தான் சொல்லியிருக்கார்னு சிரிச்சேன்.
அதுக்கப்பறம் வேலு பிரபாகரன்கிட்ட ஷூட்டிங் கேப்புல எல்லாம் உட்கார்ந்து பேசுவேன். அவர் பெரியாரோட தொகுப்பா ‘கடவுள்’னு ஒரு புத்தகம் கொடுத்து படிக்கச் சொன்னார். அந்த புத்தகத்தை படிச்சதும் எனக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா போச்சு.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைனு சொன்னதும் ஏதோ குறிப்பிட்ட மதத்தை சொல்றேன்னு நினைச்சிக்கிறாங்க. கடவுள் இல்லேன்னா, எந்த மதத்து கடவுள் மேலேயும் எனக்கு நம்பிக்கை இல்லைனுதான் அர்த்தம்.
கடவுள் நம்பிக்கையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து வாழ்க்கை ரொம்ப இலகுவாக இருக்குது. நல்ல நாள், கெட்ட நாள், அஷ்டமி, நவமி, நோன்பு, குட் ப்ரைடே, பேட் ப்ரைடே , 13ஆம் நம்பர், 8ஆம் நம்பர்னு இது எதுவுமே இல்லைங்க. இது எதுவுமே இல்லாதபோது லைப் ரொம்ப ஜாலியா இருக்கு.
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்குறவனுக்கு அந்த நேரத்துலதான் நம்பிக்கை இருக்குதே தவிர, கடவுள் மேல நம்பிக்கை இல்ல.
நான் பெரியாரின் தொண்டனாக இருப்பதால்தான் என் ஃலைப் ரொம்ப ப்ரீயாக இருக்கு. அதனாலதான் சொல்றேன், நீங்க சந்தோசமாக இருக்குறதுக் காகவாவது ஒரு பகுத்தறிவாளனா இருங்க ’’ என்றார்.