கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒப்பந்தங்களை அதானி குழுமம் கைப்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2019-ல் சூரிய மின்சக்தி டெண்டர்கள் தொடர்பான வழிமுறைகளை சாதகமாக திருத்தி மத்திய அரசு வடிவமைத்ததாக The Reporters’ Collective கூறியுள்ளது.
2019-2020 இடைப்பட்ட காலத்தில் அதானி குழுமம் வெற்றி பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட சூரிய மின்சக்தி டெண்டர்களில் Azure Power மற்றும் Navayuga Engineering நிறுவனங்களும் போட்டியிட்டன.
Navayuga நிறுவனம் சூரிய மின்சக்தி ஏலத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கேட்டதால், ஏலத்தில் தோல்வியடைந்தது.
சூரிய மின்சக்தி ஏலத்தில் அதானி குழுமம் உடன் போட்டியிட்டு வந்த Navayuga அதே காலக்கட்டத்தில்(2019), தனது ஆந்திரப் பிரதேச துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு விற்க பல ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை இறுதி செய்தது.
Azure Power நிறுவனம் 4 GW மின்சாரத்தையும், Adani Green Energy நிறுவனம் 8 GW மின்சாரத்தையும் இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனத்திற்கு (SECI) வழங்க வேண்டும் என டெண்டர் இறுதி செய்யப்பட்டது.
SECI நிறுவனம் அந்த மின்சாரத்தை விலைக்கு வாங்கி, விலையை நிர்ணயம் செய்து, அந்த 12 GW மின்சாரத்தையும், மாநில அரசுகளுக்கு (discoms) வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.
இதன்படி, மத்திய அரசின் SECI நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் அதிக விலைக்கு சூரிய மின் சக்தியை வாங்குவதற்கு Azure Power மற்றும் அதானி குழுமம் இணைந்து மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
மத்திய அரசும் SECI நிறுவனமும் அதானிக்கு சாதகமான டெண்டர் ஒப்பந்தங்களை உருவாக்க கொள்கையை வடிமைத்தன; முதலில் 4GW-க்கு ஏலம் எடுக்க முயற்சித்த அதானி குழுமத்திற்கு, அந்த சாதகமான சூழலால் இறுதியில் 8 GW வரை பெற்றதாக The Reporters’ Collective கூறியுள்ளது.
அந்த டெண்டரின் விதிமுறைகள் அதானி மற்றும் Azure Power நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான வருவாய்க்கு உத்தரவாதம் அளித்தன எனவும் கூறப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் இதேபோன்ற டெண்டர்கள் முன்பு அதானி குழுமத்திற்கு சாதகமாக இருந்ததாகவும் The Reporters’ Collective கூறியுள்ளது.
SECI நிறுவனத்தின் டெண்டர்களில் சோலார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே பங்கேற்க முடியும் என வழிவகை செய்யப்பட்டதால், அதானி போன்ற சில நிறுவனங்களுக்கு பயனளித்தன.
SECI மற்றும் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி, போதுமான மேற்பார்வை இல்லாமல் டெண்டர் விதிமுறைகளை மாற்றியதாக The Reporters’ Collective குற்றம்சாட்டுகிறது.
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டெண்டரின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து விசாரிக்க முன்வரவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Atmanirbhar Bharat (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் இந்த டெண்டரை SECI நிறுவனம் நியாயப்படுத்தியது.
அந்த டெண்டரை வைத்து அதானி குழுமம், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் சுமார் 3 பில்லியன் டாலர் நிதியை திரட்டி இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே தற்போது அமெரிக்க குற்றவியல் துறை அதானி குழுமம் மீது விசாரணையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source Link: Adani Bribery Scandal Originated in a Dubious Solar Power Auction That Modi Government Scripted