
Representative Image
கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 142 பில்லியனர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது பில்லியனர்களின் எண்ணிக்கை 185-ஆக உயர்ந்துள்ளது.
அதே போல், பில்லியன்ர்களின் சொத்து மதிப்பு $832 பில்லியனில் இருந்து ஒரு டிரில்லியனை கடந்து தற்போது $1.19 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்திய பில்லியனர்கள் பட்டியலில் இந்தாண்டு மட்டும் 29 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
Fortune India வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒப்பிடுகையில் 33.81%-ஆக உள்ளதாக தெரியவருகிறது.

இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்குள் 50% வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
$125.15 பில்லியன் சொத்துடன் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்திலும், $123.9 பில்லியன் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் முதல் 10 பில்லியனர்களில் ஒரே பெண்ணாக சாவித்ரி தேவி ஜிண்டால் $33.06 பில்லியன் சொத்து மதிப்புடன் 4-ம் இடத்தில் உள்ளார்.
உலகப் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு மத்தியிலும் இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருவதை இந்த தரவுகள் காட்டுகிறது.