தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வரவேண்டிய முதலீடுகளை மத்திய பாஜக அரசு குஜராத்திற்கு திருப்பியதாக The News Minute செய்தி தளம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த Semiconductor நிறுவனம் ஒன்று கோவையில் ரூ.6,000 கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு டெல்லியில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பிறகு வெளியே வந்த அந்நிறுவனத்தின் குழுவினரை வலுக்கட்டாயமாக ஹெலிகாப்டரில் குஜராத்திற்கு அழைத்துச் சென்று அங்கு முதலீடு செய்யுமாறு நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.
மேலும் 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Micron Technology என்ற Semiconductor நிறுவனம் குஜராத்தில் ரூ.6,770 கோடி முதலீடு செய்தது.
Micron Technology நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், ரூ.6,770 கோடி முதலீட்டில் 70% சதவீதத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து கொடுப்பதாக உறுதியளித்ததால் குஜராத்தில் அந்நிறுவனம் முதலீடு செய்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு, தெலுங்கான அரசுகள் மத்திய அரிசிடம் கேள்வி எழுப்பியபோது, தாங்கள் உருவாக்கிய Semiconductor கொள்கையின்படி குஜராத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், குஜராத்திற்கு போதிய அளவு முதலீடுகள் வந்த பிறகு பிற மாநிலங்களுக்கு முதலீடுகள் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்தனர்
Micron Technology போலவே Kaynes Technology நிறுவனமும் தெலுங்கானாவை தவிர்த்து குஜராத்தில் முதலீடு செய்தது.
2021-ம் ஆண்டு முதல் குஜராத்திற்கு தேவையான முதலீடுகளை பெற்ற பின்பு பிற மாநிலங்களுக்கு முதலீடுகளை அனுமதிக்க இருந்த நிலையில் அடுத்தக்கட்ட மாநிலங்களாக பாஜக ஆளும் உத்தர பிரதேசமும், அசாமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு Semi-Conductor நிறுவனம் 2.75 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சென்னை டைடல் பூங்காவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. அந்த நிறுவனத்திடம் மொத்த முதலீட்டில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து கொடுப்பதாக உறுதியளித்ததால் அந்நிறுவனம் குஜராத்தில் முதலீடு செய்தது.
2023-ம் ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் முதலீடு செய்ய வந்த நிறுவனத்தையும் குஜராத்தில் முதலீடு செய்யும்படி மத்திய அரசு திருப்பிவிட்டது.
குஜராத்தில் முதலீடு செய்தது குறித்து அந்த நிறுவனத்திடம் கர்நாடக அரசு கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை எதிரி மாநிலங்களாக தாங்கள் கருதுவதாகவும் குஜராத் அல்லது உத்தர பிரதேசத்தில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மத்திய அரசு தங்களை வற்புறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
2022-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் Foxconn-Vedanta நிறுவனங்கள் இணைந்து 22 பில்லியன் முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் Semi-Conductor ஆலையை நிறுவ திட்டமிட்டிருந்தது. மொத்த முதலீட்டில் 30% சதவீதம் மத்திய அரசு கொடுப்பதாக உறுதியளித்ததால் அந்நிறுவனங்கள் குஜராத்தில் முதலீடு செய்ததாக தெரிவித்தது.
மேலும் Foxconn-Vedanta நிறுவனங்களிடம் குஜராத்தில் முதலீடு செய்தால் இறக்குமதி வரி மற்றும் கூடுதல் ஜிஎஸ்டி வரியை குறைப்பதாகவும், நிலங்களை குறைந்த விலைக்கு அளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tata, Airbus நிறுவனங்கள் இணைந்து C295 எனும் விமானத்தை தயாரிப்பதற்கான ஆலையை மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மிகான் பகுதியில் நிறுவ திட்டமிட்டிருந்தது. இந்த முதலீட்டையும் மத்திய அரசு குஜராத் மாநிலம் வதோத்ராவிற்கு திருப்பிவிட்டது. மேலும் குஜராத்தில் முதலீடுகளை செய்தால் மட்டுமே இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் என Tata நிறுவனத்திடம் மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ரூ.6000 கோடி மதிப்பிலான முதலீடுகளை கோவையிலிருந்து குஜராத்திற்கு மத்திய அரசு திருப்பிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
🔹2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ரூ.6000 கோடி மதிப்பிலான முதலீடுகளை கோவையிலிருந்து குஜராத்திற்கு மத்திய அரசு திருப்பிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்
— Spark Media (@SparkMedia_TN) November 9, 2024
8/10 pic.twitter.com/nJcxbANKa9
இதே போன்று தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் மத்திய அரசின் இந்த ஒருதலைபட்சமான செயலுக்கு கண்டணங்களை பதிவு செய்தனர்.
இதெற்கெல்லாம் உச்சகட்டமாக பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜனதாதளம் கட்சியின் செயல் தலைவரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கர்நாடகாவிற்கு வரும் முதலீடுகளை திருப்பி விடுவது குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
— Spark Media (@SparkMedia_TN) November 9, 2024
10/10 pic.twitter.com/VvLNIBpJ5R
மேலும் பாஜக அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதாதளம் கட்சியின் செயல் தலைவரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கர்நாடகாவிற்கு வரும் முதலீடுகளை திருப்பி விடுவது குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.