தமிழ்நாட்டில் நடைபெறும் Khelo India Youth Games 2024 போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 5,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறும். Khelo India போட்டிகள் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கேலோ இந்தியா போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள்
278 தங்கம், 278 வெள்ளி மற்றும் 377 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 933 பதக்கங்களுடன் சுமார் 26 போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் என்பது Group Championship வடிவில் நடத்தப்படும் போட்டிகளாகும்.
இதில் தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் அல்லது அணிகள் வெற்றிபெரும் பதக்கங்கள், அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் (UT) ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் சேர்க்கப்படும்.
போட்டிகளின் முடிவில், அதிக எண்ணிக்கையிலான தங்கப் பதக்கங்களைப் பெறும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 36 பிராந்தியங்களின் பிரதிநிதித்துவங்கள் கேலோ இந்தியா போட்டியில் இடம்பெறும்.
இந்தாண்டு போட்டியை நடத்தும் தமிழ்நாடு, சுமார் 559 விளையாட்டு வீரர்களுடன் இந்திய அளவில் மிகப்பெரிய அணியாக பங்கேற்றுள்ளது.
மூன்று முறை சாம்பியனான மகாராஷ்டிரா 415 விளையாட்டு வீரர்களுடன் களத்தில் உள்ளது. இரண்டு முறை சாம்பியனான ஹரியானா, 491 விளையாட்டு வீரர்களை களம் இறக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற 5-வது கேலோ இந்தியா போட்டியில் மகாராஷ்டிரா 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கலம் என மொத்தம் 161 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் கேலோ இந்தியா பட்டத்தை இதுவரை வென்றதில்லை.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவின் தொடர் ஆதிக்கத்தை இந்தாண்டு நடைபெறும் கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Khelo India Youth Games 2024:
இன்று (ஜனவரி 22) இரவு 8 மணி நிலவரப்படி, தமிழ்நாடு 6 தங்கப் பதக்கங்களை வென்று தொடர்ந்து 3-வது நாளாக இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
சைக்கிள் ஓட்டும் போட்டியில் 2 தங்கம், வாள்வீச்சு போட்டியில் 2 தங்கம், யோகாசனா போட்டியில் 2 தங்கம் என மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை இதுவரை (ஜனவரி 22, இரவு 8 மணி நிலவரப்படி) தமிழ் நாடு வென்றுள்ளது.
இது தவிர, சைக்கிள் பந்தயம், வாள்வீச்சு, மற்றும் யோகாசனா போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் 4 பேர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
Khelo India Youth Games 2024: மாநில வாரியான தரவரிசைப் பட்டியல் (ஜனவரி 22, இரவு 8 மணி நிலவரப்படி)
தரவரிசை | மாநிலம் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | தமிழ்நாடு | 6 | 2 | 5 | 13 |
2 | மகாராஷ்டிரா | 4 | 6 | 11 | 21 |
3 | ஹரியானா | 4 | 4 | 8 | 16 |
4 | டெல்லி | 4 | 2 | 3 | 9 |
5 | குஜராத் | 3 | 0 | 2 | 5 |
6 | மணிப்பூர் | 2 | 3 | 3 | 8 |
7 | மேற்கு வங்கம் | 1 | 2 | 1 | 4 |
8 | பஞ்சாப் | 1 | 1 | 3 | 5 |
9 | சண்டிகர் | 1 | 0 | 1 | 2 |
10 | கேரளா | 1 | 0 | 0 | 1 |
10 | தெலங்கானா | 1 | 0 | 0 | 1 |
12 | ராஜஸ்தான் | 0 | 4 | 0 | 4 |
13 | ஹிமாச்சல் பிரதேசம் | 0 | 1 | 2 | 3 |
13 | உத்தரப் பிரதேசம் | 0 | 1 | 2 | 3 |
Published by அசோக் முருகன்
Last Updated: 22/01/2024 8:00 PM