
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகச் சந்தை ஆய்வு நிறுவனமான IDC வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் ஒரு அடிப்படை தேவையாகிவிட்டது. வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தனித்தனியோ ஒரு செல்போனை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு 12 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவின் மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு 10 முக்கிய நகரங்களில் மட்டும் நடந்துள்ளது. மதிப்பீட்டு ஆண்டின் அடிப்படையில் விவோ, சாம்சங், ஷாவ்மி, ஒப்போ, ரியல்மி ஆகியவை அதிக ஸ்மார்ட் போன் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது.

முதல் ஐந்து நிறுவனங்களின் கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சியும் சரிவும் சேர்ந்தே காணப்படுகிறது. விவோ நிறுவனம் 14.2 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்திலிருந்தாலும் 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஷாவ்மி 2024ம் ஆண்டில் 2.4 சதவீதம் வளர்ச்சியுடன் மூன்றாம் இடத்திலும் 13.4 சதவீத வளர்ச்சியுடன் ஒப்போ நான்காம் இடத்திலும் உள்ளது. ஐந்தாம் இடத்தில் உள்ள ரியல்மி 10.9 சதவீதம் சரிந்ததுள்ளது.
விலையின் அடிப்படையில் பார்க்கையில் ரூ.50,000-க்கு அதிகமான ஸ்மார்ட் போன்கள் 20 சதவீதம் விற்பனையாகியுள்ளது. ரூ.10,000 முதல் ரூ.30,000-க்கு வரைவுள்ள ஸ்மார்ட் போன்கள் 50 சதவீதம் விற்பனையாகியுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் போன்களின் விற்பனையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. AI தொழில்நுட்பம் வளந்து வரும் வேகத்தில் இன்னும் புது புது அப்டேட்களுடன் புதிய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அந்த சந்தையில் இந்தியா மாதிரியான அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் மீது ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் கவனமும் இலக்கும் அதிகமாகவே இருக்கும்.
rqnw0x