சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகம் செலவிடுபவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் :
சிங்கப்பூர் (Singapore), தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு-மாநிலம் ஆகும். அதன் அதிவேக வளர்ச்சி, பன்முக கலாச்சாரம் (சீன, மலாய், இந்திய), மற்றும் உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாகக் கொண்டுள்ளது. மேலும், ‘லயன் சிட்டி’ என்று அழைக்கப்படும் இது, ‘சிங்க நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள் :
சிங்கப்பூர், ஆசியாவின் முக்கிய உள்கட்டமைப்பு, நிதி மையங்கள் மற்றும் உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. தொடர்ந்து, பாராளுமன்ற ஜனநாயக குடியரசு, ஆகஸ்ட் 9, 1965 அன்று சுதந்திரம் பெற்றது. மேலும், டெமாசெக் என அழைக்கப்பட்ட இடம், பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பிறகு, லீ குவான் யூவின் தலைமையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. இதனையடுத்து, சிங்கப்பூர் அதன் நவீனத்துவம், தூய்மை, பசுமை மற்றும் பல கலாச்சாரங்களின் இணக்கமான வாழ்வுக்கு பெயர் பெற்றது ஆகும்.
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் இந்தியர்களின் பங்கு :
2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சிங்கப்பூரில் 5 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இந்திய சுற்றுலாப் பயணிகள் (Indian tourists) செலவழித்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.40 சதவீதம் அதிகமாகும். இந்தியர்களைப் போன்றே, சீனா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்களுக்காக அதிகம் செலவழிக்கின்றனர்.

மேலும், தங்களின் வர்த்தகப் பகுதிகள் இந்தியர்களுக்கு தொடர்ச்சியான மிகப்பெரிய வர்த்தக சந்தையாக திகழ்ந்து வருகிறது என்றும் சிங்கப்பூரில் இந்தியர்கள் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகம் செலவிடுகிறார்கள் என சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான ஆர்ச்சர்டு ரோடு (Orchard Road) வர்த்தக சங்கத்தினர் கூறுகின்றனர். மேலும், இந்தியர்கள் முன்பை விட தற்போது நீண்ட நாட்கள் தங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் இதனால், உணவகம், பொழுதுபோக்கு, சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதி என அவர்களின் பிற செலவுகளும் அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர்.

மேலும், மின்னணு சாதனங்கள், கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், பிராண்டட் கைப்பைகள் மற்றும் ஆடைகள் ஆகியவை அவர்களின் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு :
மேலும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அளித்த தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சிங்கப்பூருக்கான இந்திய பார்வையாளர்களின் வருகை 10 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட 2.6 சதவீதம் அதிகமாகும் என்றும் ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையில் ஒரு கோடியே 42 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர் என்றும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.

