இண்டிகோ நிறுவனம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ நிறுவனமும் சிக்கல்களும்
இண்டிகோ நிறுவனம் (Indigo Company) சமீபகாலமாகப் பெரும் செயல்பாட்டுச் சிக்கல்களை (operational issues) சந்தித்து வருகிறது. மேலும், இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குளறுபடிகளுக்கான முக்கியக் காரணங்கள் :
- விமானிகள் பற்றாக்குறை: விமானிகளின் பணி நேரம் மற்றும் ஓய்வு நேரம் தொடர்பான புதிய, கடுமையான விதிமுறைகளை (FDTL – Flight Duty Time Limitations) இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நவம்பர் 1, 2025 முதல் அமல்படுத்தியது. இதற்கு ஏற்றவாறு போதுமான கூடுதல் விமானிகளை இண்டிகோ நிறுவனம் பணியமர்த்தவில்லை. இதனால், புதிய விதிகளின்படி விமானங்களை இயக்கப் போதுமான விமானிகள் இல்லாமல் போனது.
- திட்டமிடல் குறைபாடுகள்: இண்டிகோ நிறுவனம் தனது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தபோதிலும், புதிய விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு விமானிகளின் பணி அட்டவணையைச் (roster) சரியாகத் திட்டமிடத் தவறிவிட்டது. இதுவே நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- விமானச் சேவைகள் ரத்து மற்றும் தாமதம்: இந்தக் காரணங்களால், டிசம்பர் தொடக்கத்திலிருந்து இண்டிகோ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின. இதனால் நாட்டின் பல விமான நிலையங்களில் பயணிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
- அரசு நடவடிக்கை: பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டு, இண்டிகோ நிறுவனத்தின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க உத்தரவிட்டது. மேலும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
- பணத்தைத் திரும்பப் பெறுதல்: பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுப் பணத்தையும் விரைவாகத் திரும்ப வழங்கவும், உடைமைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியது – CEO
இண்டிகோவின் செயல்பாடுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன (Back-to-normal) என்றும், விமானி பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விமான ரத்துகள் மற்றும் தாமதங்களைத் தொடர்ந்து, டிசம்பர் 9, 2025 முதல் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் செயல்திறன் மீட்டெடுக்கப்பட்டு பணத்தைத் திரும்பப் பெறுவதாகவும் இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் (Peter Elbers) அறிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு நன்றி
தங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது தாங்கள் வாடிக்கையாளர்களை சிரமப்படுத்தியதற்கு தாங்கள் வருந்துகிறோம் என்றும் தங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவன CEO
இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதங்கள் நாட்டின் விமான நிலையங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஐஓ பீட்டர் எல்பர்ஸ் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
