அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அலுவலகம் சென்னையில் இருப்பதாகவும், ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் அலுவலகம் இருக்கும்போது எதற்கு அமெரிக்கா சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டும்? என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழ்நாடு அரசு இதை மறுத்துள்ளது. பரவும் தகவல் பொய்யான தகவல் என்று சொன்ன அரசு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது.
சென்னையில் டிரில்லியண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம், உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிரில்லியண்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவை தவிர கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், கொலம்பியா நாடுகளில் மட்டுமே அலுவலகங்கள் இருக்கின்றன. சென்னையில் தற்போது வரைக்கும் இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி மையமோ, அலுவலகமோ எதுவும் இல்லை. ஆனால், இருப்பது போன்று பரவும் புகைப்படத்தில் அந்த நிறுவனத்தின் ஆன் – சைட் பணிக்கானது என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.