
முழு நேர அரசியலுக்கு விஜய் சென்றுவிட்டதால் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிந்தது என்று நினைத்தால் தனுஷ் அந்த பஞ்சாயத்தை கையில் எடுத்திருக்கிறார்.
விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வக்காலத்து வாங்கிய சரத்குமாரும், சத்யராஜும் இப்போது அவர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிவிட்டதால் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டார்கள். விஜய்க்கு எதிராகவே பேசி வருகிறார்கள்.
’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லி வந்த சிம்பு கூட, யங் சூப்பர் ஸ்டார் என்று மாறாமல் எஸ்.டி.ஆர். என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.

திடீரென்று தனுஷ் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறார். இட்லி கடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை முன்னிட்டு அந்த விழா நடைபெற்ற இடம் முழுவதும் ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்களில், ‘’இளைய சூப்பர் ஸ்டாரே?’’ என்று இருந்ததுதான் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினிக்கு மறுமகனாகவே தொடர்ந்திருந்தால் அப்படி சொல்லிக்கொள்ளலாம். ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் இது சரியா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.