இதைச்சொல்லலாமா? வேண்டாமா? என்று தெரியவில்லை. என்னுடைய கடைசிப்படம் ஜனநாயகன்… என்று மலேசியாவில் நடந்த இசைவெளியீட்டு விழாவில் பேசினார் விஜய்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தவெக தயாராகி வருவதால் ‘ஜனநாயகன்’ படம்தான் கடைசிப்படம் என்று பலரும் சொல்லி வந்த நிலையில் விஜய்யே நேரடியாக அறிவித்திருக்கிறார்.
மலேசியாவில் நடந்த விழாவில் விஜய் அறிவித்தபோது அவரது ரசிகர்கள் பலரும், மீண்டும் நடிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினர்.
அந்த விழாவில் பேசிய ஜனநாயகன் படத்தின் இயக்குநர் எச்.வினோத்தும் கூட, தள்பதிக்கு எண்ட் கார்டு கிடையாது என்று அழுத்தமாகச் சொன்னார்.

அரசியல் விமர்சகர்களும் இதையே சொல்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஆகிவிடலாம் என்று நம்பிக்கையில் ஜனநாயகன் படத்தை கடைசிப்படமாக அறிவித்துவிட்டார் விஜய். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார் விஜய் என்கிறார்கள். அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டேவும், ஜனநாயகன் கடைசிப்படம் என்று விஜய் சொன்னதை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விஜயின் கடைசிப்படம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்கிறார்.

விஜயிடம் 27 ஆண்டுகள் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார், ‘’2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் உண்மை நிலவரம் விஜய்க்கு புரியவரும். 2026ல் ஆகஸ்ட் மாதத்தில் விஜய் அடுத்த படத்தில் நடிப்பார்’’ என்று அடித்துச்சொல்கிறார்.
