அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது மட்டுமல்லாமல், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது, அதிமுக கரை போட்ட வேட்டி வேட்டி கட்டக்கூடாது என்று ஏகப்பட்டது அவமானங்களை சந்தித்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், அதிமுகவை ஒன்றிணைத்துவிடுவேன் என்று தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை சொல்லி வந்தார்.
ஆனால், இன்னும் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் பரவாயில்லை. இணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருப்பதால் செய்வதறியாமல் தவித்து நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த நிலையில்தான் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவில் இணைந்துவிடும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டது என்று தகவல் பரவியது. அதற்கேற்றார் போல் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லி புறப்பட்டுச்சென்றார்.
டெல்லியில் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறா. ஜம்மு -காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக படு டென்ஷனில் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க யாரும் அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியையும், டெல்லியில் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெற்று வரும் தனது மகன் ரவீந்திரநாத்தையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு இன்று சென்னை திரும்புகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் பரபரப்பு அடங்கிய பின்னர் மீண்டும் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளார் ஓ.பன்னீர்செல்வம் என்று தகவல்.