
தவெகவினரை அதிமுக பக்கம் இழுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பழனிசாமியும், அதிமுகவின் அடுத்தக்கட்ட தலைவர்களும் பேசுவது எல்லாம் அதிமுக வாக்கு வங்கியை தவெக பக்கம் நகர்த்துகிறது என்கிற தகவலால் அதிர்ந்து போய் நிற்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
பிள்ளையார் சுழி போட்டாச்சு, வலுவான கூட்டணி அமையும் என்று தவெகவினரை அதிமுக பக்கம் இழுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார் பழனிசாமி. ஆனால் இவர் இப்படி பேசுவதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியும் தொண்டர்களும் விஜய் நோக்கி நகருகிறது என்கிற புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள்.

மெகா கூட்டணி அமைக்கப் போகிறேன், பெரிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது என்றெல்லாம் தவெவை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார் பழனிசாமி. இதனால், தவெக பெரிய கட்சி என்றால், அதிமுக பெரிய கட்சி இல்லையா? எனப்புலம்புகின்றனர் அதிமுகவினர்.
தவெக வந்தால் வென்றுவிடலாம் என்று அடுத்தவர்கள் பலத்தில் வென்றிட நினைத்து பேசும் தலைவரை எந்த தொண்டர்தான் ஏற்றுக்கொள்வார்? அதனால்தான் பழனிசாமியின் பேச்சினால் சோர்வடைந்து வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
தன் கட்சியை வலிமைப்படுத்தினால் அடுத்தவர்கள் தேடி வருவார்கள் என்கிற உண்மையை உணராமல், தவெக போன்ற கட்சிகள் வராவிட்டால் தோற்றுவிடுவோம் என்பது மாதிரி பேசும் பழனிசாமியின் பேச்சு அதிமுகவை தோல்விப்பாதைக்கே அழைத்துச் செல்கிறது என்கின்றனர் அக்கட்சித் தொண்டர்கள்.