பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை அனுப்பிய அந்த மின்னஞ்சலால் ஜக்கி வாசுதேவ் வசமாக சிக்கப்போகிறார் என்ற தகவல் பரவுகிறது.
ஆன்மீகம் என்ற போர்வையில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் மையாக உள்ளது ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா பள்ளி குழுமம் என்று ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேர் கடந்த 17ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் சொன்னது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஷா பள்ளி குழுமத்திற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை அனுப்பிய மின்னஞ்சல் நேற்று 21ஆம் தேதி வெளியாகி மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஈஷா பள்ளி குழுமம் எங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான இடத்தை வழங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பாதுகாப்பு வழங்கவில்லை என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள அவர், வேலியே பயிரை மேய்ந்த கதையினையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தன் குழந்தை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிந்த போது பலமுறை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும், இதை தங்களிடம் சொல்ல பலமுறை முயன்றும் முடியாமல் போயிருக்கிறது என்றும், அந்த விரும்பத்தகாத சம்பவங்களை மறக்க இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார் என்றும் , வீடு திரும்பிய போதுதான் தவறான இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததை எங்களிடம் சொன்னார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆதாரமாக இருக்கும் இந்த மின்னஞ்சல் ஜக்கி வாசுதேவை சிக்க வைக்கப்போகிறதா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.