
இஸ்ரேல் ஹமாஸ் போரில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ள மத்திய பாஜக அரசு, மத்திய கிழக்கு நாடுகளின் சிக்கலான புவிசார் பிரச்சினைக்குள் தன்னை இழுத்துக் கொண்டும் உள்ளது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் இந்தியா தொடர்புடைய முக்கியமான வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட சமீபத்திய சம்பவங்கள், மத்திய கிழக்கின் பிராந்திய பிரச்சினையில் இந்தியாவின் சிக்கலான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அரபிக் கடலில் வணிகக் கப்பல் ‘(எம்வி) கெம் புளூட்டோ’ மற்றும் செங்கடலில் ‘எம்வி சாய்பாபா’ மீதான தாக்குதல்கள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூக அரசியல் நிலப்பரப்பில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துப் பேசுகையில், இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய சக்திக்கு எதிரான பொறாமை அதிகரித்துள்ளது வெளிப்படுவதாக கூறியிருந்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் நடுநிலையாக இருந்தாலும், இந்தியா தனது லட்சக்கணக்கான குடிமக்கள் வசிக்கும் மத்திய கிழக்குப் பிராந்திய பிளவுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாக, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது.
செங்கடலில் வணிக சரக்குக் கப்பல்கள் மீதான ஹூதி அமைப்பின் தாக்குதல்களால், கப்பல் வழித்தடங்கள் சீர்குலைந்து, மேற்கு ஆசியாவின் பொருளாதாரத்தை சேதமடைய செய்துள்ளது.
இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் 25% வரை விலை உயர்வை சந்திக்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. போர் தொடர்ந்து நடந்தால், உலகளாவிய வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தலிபான் ஆட்சியின் பிடியில் சிக்கிய நிலையற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் போர் உள்ளிட்டவற்றால் இந்திய நலன்களை மேம்படுத்துவதற்கு ஈரானின் மூலோபாய பங்கு முக்கியமாகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தியாவின் லட்சியத்தில், மத்திய கிழக்குப் பகுதி பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதி தற்போது, இந்தியாவின் இராஜதந்திர வலிமைக்கான ஒரு சோதனைக் களமாக மாறியுள்ளது; பிளவுபட்டுள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இந்தியாவின் பங்கு நடுநிலைமைக்கு அப்பாற்பட்டது; புதிய வடிவம் எடுத்துள்ள உலக புவிசார் அரசியலில், இந்தியா நீண்ட தூர போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.