தங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற கணக்கில் இருக்கிறதாம் விஜயின் இணைய கூலிப்படைகள்.
ரஜினி நடித்த கூலி படத்தின் ரிலீசின்போது விஜயின் இணைய கூலிப்படைகள் பரப்பிய நெகட்டிவ் கமென்ட்கள் படத்தை ஓரளவு பாதித்தது உண்மைதான் என்கிறார்கள். ஆனால், படம் நன்றாக இல்லை. அதுதான் உண்மை. இதற்கு எதற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் மீது பழி போடுகிறார்கள் என்று விஜய் இணைய கூலிப்படைகள் கூவுவதாகச் சொல்கிறது கோடம்பாக்கம்.

இப்போது விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் படு சுமாராக இருந்ததால் ரசிகர்கள் அப்பாடலை திரும்பத் திரும்ப கேட்காததால் வியூவ்ஸ் ஏறவில்லை. இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாமல், விஜயின் வளர்ச்சி பிடிக்காமல் யூடியூப் தளத்தில் ஜனநாயகன் பாடலுக்கு எதிராக புகார்கள் அனுப்பிக் கொண்டே இருந்ததால் வியூவ்ஸ் ஏறவில்லை என்று முரட்டு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சூரியன் வெளிச்சத்தை கைக்குட்டையால் மறைக்க முடியாது. விஜய் என்பவர் சூரியன் மாதிரி என்று ஏகப்பட்ட பில்டப் வேறு.

சிவகார்த்திகேயன் கூட 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார். விஜய்க்கு சம்பளம் 250 கோடி ரூபாயாம். அட்லீக்கு சம்பளம் 100 கோடி ரூபாயாம். நெல்சனுக்கு அடுத்தப்பட சம்பளம் 100 கோடி ரூபாயாம். ஆனால் நடிகர் அஜித்குமாருக்கு மட்டும் சம்பளம் 80 கோடி ரூபாய் மட்டும்தானாம். அவர் 80 கோடி ரூபாய்க்குத்தான் வொர்த் என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார் கல்பாத்தி அகோரம் என்று சொல்லும் விஜய் இணைய கூலிப்படைகள், அஜித்துக்கு வெறும் 80 கோடி ரூபாய்தான் தரமுடியும். அந்த அளவுக்குதான் நீங்க வொர்த் என்று கல்பாத்தி அகோரம் சொன்னதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், அஜித்க்கு வாய்ப்பு கேட்டு அவரின் மேலாளர் சுரேஷ்சந்திரா தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறார் என்று அவதூறு பரப்பி வருகிறது விஜயின் இணைய கூலிப்படைகள்.
வியூவ்ஸ் அதிகம் வேண்டும் என்றால் அடுத்த சிங்கிளையாவது நாங்கள் விரும்பும் விதத்தில் கொடுக்கச் சொல்லுங்கள் என்கிறார்கள் ரசிகர்கள். இது விஜய் இணைய கூலிப்படைகள் காதில் விழுமா? என்று கேட்கிறது கோடம்பாக்கம்.

லோகேஸ் கனகராஜ் சொன்ன கதை பிடிக்கவில்லை என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே அவரை கழற்றிவிட்டு விட்டார் ரஜினி. அதே மாதிரி சுந்தர் .சி சொன்ன கதை பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளியே சொல்லாமல் இருந்தனர் ரஜினியும் கமலும். சுந்தர் சி. ஆனால், சுந்தர் .சி அறிக்கை வெளியிட்டு, தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொண்டார். உண்மை இவ்வாறிருக்க, ரஜினையும் கமலையும் அசிங்கப்படுத்தி விட்டார் சுந்தர்.சி என்றும், ரஜினி – சுந்தர்.சி படம் டிராப் ஆனதற்கு லோகேஷ் கனராஜின் சாபம் காரணமா? என்று ரஜினி, கமல், அஜித் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு பரப்பும் விஜய் இணைய கூலிப்படைகள், விஜய் வளர்ச்சியை தடுக்க யூடியூப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கதறுவது வேடிக்கைதான் என்கிறது கோடம்பாக்கம்.
