
மனைவியை ஆர்த்தியை பிரிந்த நேரத்தில், பாடகி கெனிஷாவை காதலித்து அவருடன் தனிக்குடித்தனம் நடத்துவதால்தான் ஆர்த்தியை பிரிகிறார் ரவி என்ற விமர்சனத்தை அப்போது மறுத்தார் ரவி.
மன அழுத்த சிகிச்சைக்காக மட்டுமே கெனிஷாவை சந்தித்ததாக சொல்லி இருந்தார் ரவி. கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக இருப்பதற்காக ஆதாரங்களை எல்லாம் ஆர்த்தி தரப்பும் அளித்தும் கூட அதையெல்லாம் மறுத்தார் ரவி.
இப்படி மறுக்கும் நீங்கள். பின்னர் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவீர்கள். பொது இடங்களிலும் அடிக்கடி வலம் வருவீர்கள். அப்புறம் கல்யாணமும் செய்து கொள்வீர்கள். இதெல்லாம் நடக்கத்தான் போகிறது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை எல்லாம் மறுத்திருந்தார் ரவி.

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் காதல் மாதிரியான எண்ணம் எல்லாம் இல்லை என்று அடித்துச்சொல்லி இருந்தார் ரவி.
ஆனால், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக வந்திருந்தார் ரவி. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தது மட்டுமல்லாமல் காரில் ஏறப்போகும் போதும் பிரிய மனமில்லாமல் கெனிஷாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டே நடந்தார் ரவி. அதனால்தான் கெனிஷாவை ரவி மறுமணம் செய்துகொள்ளப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இருவரும் பட்டு வேட்டி சட்டை, பட்டுச்சேலையில் வந்திருந்தது வேறு இருவரும் மறுமணத்திற்கு தயாராகி விட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதால்தான் தன்னைப் பிரிகிறார் ரவி என்று ஆர்த்தி குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாகவே பொதுவெளியில் நடமாடுகிறார் ரவி. தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று சொன்னவர், சிகிச்சைக்காக மட்டுமே கெனிஷ்வை சந்தித்தேன் என்று சொன்னவர், இப்போது பிரபல தயாரிப்பாளரின் மகள் திருமணத்திற்கு சர்ச்சைக்கு காரணமான பெண்ணுடன் ஏன் வரவேண்டும்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
v2d10m