அசையும், அசையா சொத்துக்கள் எல்லாமே ஆர்த்தி பெயரில் தான் இருக்கிறது. அவர் ஆடம்பரமாக நிறைய செலவு செய்கிறார். ஆனால், நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார். அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார். இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல் என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.
பாடகி கெனிஷ்காவுடன் கொண்ட சகவாசம்தான் ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிய நினைக்கிறார் என்கிறது ஆர்த்தி தரப்பு.
செப்டம்பர் 9ம் தேதி அன்று மனைவியை ஆர்த்தியை பிரிவதாக தனது எக்ஸ் தளத்தில் ஜெயம் ரவி அறிவித்தார் என்றாலும், சில மாதங்களுக்கு முன்னதாகவே ஜெயம் ரவி விவாகாரத்து மூடில் இருக்கிறார் என்று செய்திகள் பரவின. மனைவி, மாமியாருடன் ஏற்பட்ட சண்டையினால் பெற்றோர் வீட்டிற்கும் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறார் என்றும், பின்னர் மன உளைச்சலின் காரணமாக கோவாவில் உள்ளார் என்றும் செய்திகள் பரவின.
திருமணத்திற்கு முன்பு வரையிலும் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் ராஜா கட்டுப்பாட்டில்தான் இருந்தார் ரவி. ஜெயம் ரவியை ஒருதலையாக காதலித்து வந்த தயாரிப்பாளர் சுஜாதாவிஜயகுமாரின் மகள் ஆர்த்தி ரவியை சிங்கப்பூர் பயணத்தின் போது அறிமுகம் செய்தவர் நடிகை குஷ்பு. ரவி – ஆர்த்தியின் காதலுக்கு உதவி செய்த குஷ்புவே இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக மாமியார் , மனைவி கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறார் ரவி. இதனால் தனது சொத்துக்கள் பெரும்பாலும் ஆர்த்தி பெயரில்தான் உள்ளது என்கிறார் ரவி.
ரவியின் சமூகவலைத்தள கணக்குகளும், வங்கிக்கணக்குகளும் ஆர்த்தியின் செல்போனை வைத்தே இயங்குவதால் ரவி எவ்வளவு பணம் எடுத்தாலும் ஆர்த்திக்கு மெசேஜ் சென்றிருக்கிறது. உடனுக்குடன் இதை ரவியிடம் கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். ரவி சொன்னது உண்மைதானா என்பதை அவரது உதவியாளர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆர்த்தி. இது ரவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாமியாரின் தயாரிப்பில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு அடங்கமறு, பூமி என்று வரிசையாக படம் எடுத்து எல்லா படங்களுமே நஷ்டம் என்று பொய்க்கணக்கு காட்டி வந்திருக்கிறார்கள். சந்தேகம் வந்து ஆராய்ந்த போதுதான் அது பொய்க்கணக்கு என்பது ரவிக்குக் தெரியவந்திருக்கிறது.
தன் அண்ணன் ராஜாவுக்கு தனி ஒருவன் -2க்கே கால்ஷீட் கொடுக்க முடியாதபடி முழுவதுமாக ரவியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது ஆர்த்தியின் குடும்பம். சுஜாதா விஜயகுமார்தான் ரவியின் கால்ஷீட்களை பார்த்திருக்கிறார். இதுவே ரவிக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது.
’பிரதர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளி ஊரில் ஓட்டலில் தங்கி இருக்கும் போது திடீரென்று இரவில் வீடியோ கால் செய்து, அறையில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று காட்டச்சொல்லி இருக்கிறார் ஆர்த்தி.
தான் சம்பாதித்தது எல்லாம் ஆர்த்தியின் பெயரில் வீடு, நகைகள், கார்கள் என்று இருக்கின்றது. அப்படி இருக்கும் போதும் வேலை ஆட்களுக்கு இருக்கும் மரியாதை கூட மாமியார் வீட்டில் தனக்கு இல்லை. மற்றவர்கள் முன்பாக மாமியாரும், மனைவியும் சத்தம் போட்டு கோபமாக பேசுவார்கள். அது எல்லாம் தனது அவமானமாக இருந்தது என்று தனது விவாகரத்திற்கான காரணங்களாக பிரபல யூடியூபர்களை சந்தித்து சொல்லி வருகிறார் ரவி.
பாடகி கெனிஷ்காவுடன் உறவில் இருக்கிறார் ரவி என்று ஆர்த்தி தரப்பு வெளியிட்ட செய்திகளால் ஆத்திரமடைந்துதான் ஆர்த்தி மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் ரவி.
பாடகி கெனிஷ்கா ஒரு ஹீலர் என்பதால், மன பாதிப்புக்கு சிகிச்சைக்காகத்தான், சென்னையில் சிகிச்சை எடுத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால்தான் கோவா சென்று கெனிஸ்காவிடம் சிகிச்சை எடுத்ததாக சொல்கிறார் ரவி.
ஆனால், கெனிஸ்காவுடன் ரவிக்கு ஆழமான தொடர்பு இருக்கிறது என்று அதற்கான பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. ரவி திடீரென்று விவாகரத்து முடிவெடுத்துவிட்டார். நானும் 2 குழந்தைகளும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆர்த்தி சொன்னது பொய் என்கிறார் ரவி.
மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை இல்லாததால் வெளியே வந்து அலுவலகத்திலும், நண்பர்கள் வீடுகளிலும், ஓட்டல்களிலும் வாழ்ந்து வந்தபோது, பிரபல தனியார் ஓட்டலில் அறை எடுத்து அங்கே பிறந்தநாள் காணும் தன் மகனை அழைத்து வரச்சொல்லி காலை முதல் மாலை வரை காத்திருக்கையில் மகனை அழைத்துக்கொண்டு ஆர்த்தி இலங்கை சென்றது தெரியவந்ததும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார்.
மாமியார் கொடுமை ஒருபக்கம் மனைவி கொடுமை ஒருபக்கம் எல்லாம் சேர்த்துதான் விவாகரத்திற்கு முன்வந்து தன் மூத்த மகனிடம் சொல்லி அவனை சமாதானப்படுத்தி வழக்கறிஞர் நோட்டில் அனுப்பி, அதன் பின்னர்தான் எக்ஸ் தளம் மூலமாக பிரிவதாக அறிவித்தேன் என்கிறார் ரவி.
விவாகரத்து கேட்டு ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஆர்த்தி. நீதிமன்ற கவுன்சிலிங்கில் இருவரும் சமாதானம் ஆகிப்போக வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதைப்பார்த்தால் இப்போதைக்கு இருவரும் சமாதானம் ஆவது மாதிரி தெரியவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே ஆர்த்தி பக்கம் இருக்கும் நடிகை குஷ்புவோ, குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து குடும்பம் நடத்த வேண்டும். அதை விட்டு, பிரச்சனை என்றதும் ஓடுவது ஆண்மகனுக்கு அழகல்ல என்று கடும் ஆத்திரத்துடன் தனது கருத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.