
தமிழக வெற்றி கழகத்தில் தற்போது மாவட்ட செயலாளர் மற்றும் பிற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நியமனத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகளின் பின்புலம் & விவரங்கள் பற்றி சிறிதளவு கூட தவெக தலைவர் விஜய்க்கு தெரியாது.
இது குறித்து நம்மிடம் பேசி வந்த தவெக நிர்வாகி ஒருவர் பொருளாளர் வெங்கட்ராமன் ஆதரவாளர்கள் எவரும் எந்த ஒரு பதவியிலும் கூட நியமிக்கப்படவில்லை.
இணை கொள்கை பரப்பு செயலாளர் தாஹிராவும் மற்றும் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் என இருவரும் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களாக இருந்து கொண்டு பொருளாளர் வெங்கட்ராமனிடம் எந்த ஒரு ஒப்புதலை பெறவில்லை என தெரிவிக்கிறார்கள்.

பொருளாளர் வெங்கட்ராமன் உடைய ஆதரவாளர்களுக்கும் மேலும் அவருடன் தொடர்பில் இருந்தாலும் அவர்களுக்கும் எந்தப் பதவியும் வழங்கக்கூடாது என்று புஸ்ஸி ஆனந்தும் மற்றும் ஜான் ஆரோக்கிய சாமியும் முன்னின்று செய்கிறார்கள்.
இவ்வாறு தவெக பொருளாளர் வெங்கட்ராமன் ஓரங்கட்டப்படுவதாலும் அவருடைய ஆதரவாளர்கள் ஒதுக்கப்படுவதாலும் தமிழ்நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் என இருவருக்கும் மோதலை உருவாக்கி வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி.

வெங்கட்ராமனை கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும் என்றும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் வெங்கட்ராமன் என இருவருக்கும் எப்போதும் மோதலை உருவாக்க வேண்டும் என்றும் செயல்படுகிறார் ஜான் அரோக்கியசாமி என்று நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனைகள் குறித்து விஜய்க்கு தெரிய வந்த நிலையில், அவர் இருவரையும் அழைத்து இருவரும் சுமுகமாக, ஒற்றுமையாக இருந்து கட்சி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் மோதல் போக்கு நீடிக்கிறது என்கிறார்கள்.