கடையநல்லூரில் முஸ்லீம்கள் ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.
இது வெறுப்பை பரப்பும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருத்த பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் தண்டவாளத்தில் கிடந்த கல்லில் மோதியது. இது தொடர்பாக இாயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது .
தண்டவாளத்தில் கல் வைத்தது யார் என்று இதுவரையிலும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரையிலு சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று இரயில்வே காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை போலீசார் கண்டறியாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் இரயிலைக் கவிழ்க்க சதி என்று வதத்தியைப் பரப்பி வருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உண்மை கண்டறியும் குழு தெரிவித்திருக்கிறது.