கோமியத்தில் நன்மை பயக்கும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என் தந்தை காய்ச்சலில் இருந்தபோது சன்னியாசி ஒருவர் கொடுத்த கோமியத்தை குடித்ததும் என் தந்தைக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது என்று சென்னை ஐஐடியின் நிறுவனர் காமகோடி சொன்னது கடும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்த கேள்விக்கு, ‘’மாட்டுப்பால் குடிப்பது இடைசாதி. மாட்டுக்கறி தின்பது கீழ்சாதி. மாட்டு மூத்திரம் குடிப்பது உயர்சாதி’’ என்றார்.
’’நான் அலோபதி படுத்திருக்கிறேன். ஆனாலும் ஆயுர்வேதத்தில் நம்பிக்கை இருக்கிறது. விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சியில் கோமியத்தில் 80 வகையான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை. ‘’கோமியம் மதுவை விட மோசமானது இல்லை’’என்றும் அவர் சொல்கிறார்.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தமிழ்மாநில தலைவர் செல்வபெருந்தகை பதிலடி கொடுத்திருக்கிறார். ‘’ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்’’என்று தெரித்திருக்கிறார்.