எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் ஏன் கமலுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரம், கூட்டணிக்கணக்கு போட்டுத்தான் ஒவ்வொன்றையும் செய்கிறார் விஜய் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
’’பார்க்கத்தான் அமைதியாக இருப்பார். ஆனால் ரொம்ப விவரமானவர் விஜய்’’ என்று பாராட்டி இருந்தார் கமல்ஹாசன். பல மேடைகளில் ‘’தம்பி விஜய்’’ என்று புகழ்ந்து தள்ளினார் கமல். ‘’அபூர்வ சகோதர்கள்’’ பட ஆச்சர்யத்தில் இருந்து இன்னமும் தான் மீளவில்லை என்று விஜய்யும் கமல்ஹாசனிடம் அடிக்கடி சொல்லி மேடைதோறும் அவரை மரியாதைப்படுத்தி வந்தார்.
தனது அபூர்வ சகோதரர்கள் படத்தை ரீமேக் செய்துவிட்டு அந்த மெர்சல் படத்தை தனக்கு போட்டுக்காட்டுகிறார்களே என்ற ஆத்திரத்தில் விஜய் -அட்லியை சந்தித்தபோது பின்னால் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை வைத்து குத்திக்காட்டினார் விஜய். கமலின் இந்த நக்கல் நாடகம் விஜய்யை காயப்படுத்தி இருந்தாலும் கமலிடம் இருந்த மரியாதை குறையாமல் தான் இருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பின்னரும் கூட கமல் மீது அதே மரியாதை வைத்திருந்தார் விஜய். ஆனால், இப்போது கமல் தீவிர திமுக ஆதரவாளராக ஆகிப்போனதால், திமுகவை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட விஜய்க்கு கமலுக்கு வாழ்த்து சொல்ல மனமில்லாமல் போய்விட்டது.
‘’என் தம்பி’’ என்று அன்பொழுக பேசி வந்த சீமானை, மாநாட்டிற்கு பிறகு, ‘’நீ லாரியில் அடிபட்டு செத்து போயிடுவ..’’ என்று பேச வைத்துவிட்டார் விஜய். அண்ணனாவது தம்பியாவது அரசியலில் கொள்கைக்கு எதிர் என்றால் எதிரிதான் என்று விஜய் தனது எதிரே என்று அறிவித்துவிட்டார் சீமான். ஆனாலும், சில கூட்டணி கணக்குகளால் சீமானை பதிலுக்கு விமர்சிக்கவில்லை விஜய். சீமானையும் நாதகவையும் விமர்சிக்க கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்.
விசிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில்தான் அக்கட்சியின் கோரிக்கையான ஆட்சியில் பங்கு என்பதை தனது கட்சியின் கொள்கை என்று அறிவித்தார் விஜய். திருமாவளவனுக்கும் அவரது பிறந்தநாளில் வாழ்த்து சொன்னார் விஜய். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் கூட கூட்டணி கணக்குதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எதிரி என்று நினைக்கும் சீமானுக்கே வாழ்த்து (நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) சொல்லும் விஜய், எதிரணியில் இருப்பதால்தான் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
அதே நேரம் அரசியல் கட்சித்தலைவராக கமலுக்கு வாழ்த்து சொல்லாவிட்டாலும் கூட, சக நடிகர், அதுவும் மூத்த நடிகர் என்கிற முறையிலாவது கமலுக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருக்கலாம். விஜய் கண்ணுக்கு இப்போது கூட்டணி மட்டுதான் தெரிகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.