என்ன நடந்தது? ஏது நடந்தது? என்பதே தெரியாது. ஜென்டில்மேனாக விலகிவிடுவார்கள். இதைப்பற்றி ஆளுக்கொரு கதை சொல்லுவார்கள். இதுதான் சினிமாவில் காலம் காலமாக நடக்கும் கதை. இந்த நடைமுறையை மாற்றி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகர் சூர்யா. தன்னை வைத்து காக்க காக்க என்ற வெற்றிப்படத்தை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கதை சொல்லத் தெரியவில்லை என்று அறிக்கை விட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இது சூர்யாவின் அகந்தையைக் காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதே போன்றுதான் இப்போது சுந்தரியும் அறிக்கை விட்டு வறுபட்டுக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும், ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தையும் இயக்கிய பின்னர்தான் சுந்தர் சியின் மார்க்கெட் உயர்ந்தது. தற்போது பேய் ஹிட் அடித்து மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறார் சுந்தர் சி.
அதனால்தான் அவரை அழைத்து தனது அடுத்தப்படத்தை இயக்கச் சொல்லி இருந்தார் ரஜினி. இப்படத்தை கமல் தயாரிக்க முடிவெடுத்து அவரே அறிவிப்பையும் வெளியிட்டார்.

கமல் அறிவித்த சில தினங்களிலேயே தான் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து விலகினால் கூட அதைப்பற்றி வெளியே ஏதும் சொல்லாமல் அடுத்தப்படத்திற்கு தாவிவிடும் வழக்கம் இருக்கையில் அதற்கு மாறாக, கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் இருந்து விலக முடிவெடுத்தால் அவர்களிடமே சொல்லிவிட்டு விலக வேண்டியதுதானே? இல்லை என்றால் வேறு ஒருவர் மூலமாக விலகலை சொல்லிவிடுவதுதானே நாகரீகம். ரஜினி, கமல் இருவருக்குமே தெரியாமல், இருவரும் சுந்தர் சியுடம் இணைந்து செய்யும் படம் குறித்து பயணித்துக் கொண்டிருக்கையில், அவர்களுக்கே தெரியாமல் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுவது அநாகரீகம்? இது சுந்தர் சியின் அகந்தையைக் காட்டுகிறது என்று பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

என்னதான் நடந்தது?
சுந்தர் சி இந்த அறிக்கையை வெளியிடும் போது கமல் டெல்லியில் இருந்தார். விபரம் அறிந்த அவர் உடனே இந்த அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட குஷ்புவிடம் தொடர்பு கொண்டு, ‘’என்ன நடந்தது?’’ என்று கேட்க, அதற்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது. சுந்தர் வெளியிடச் சொன்னதால் வெளியிட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதைக்கேட்டு ஆத்திரப்பட்ட கமல், முதலில் அதை டெலிட் பண்ணுங்க. மற்றதை நான் சென்னை வந்ததும் பேசிக்கிறேன் என்று சொல்ல, விபரத்தை சுந்தர் சியிடம் எடுத்துச் சொல்லிவிட்டு, அந்த அறிக்கை பதிவை டெலிட் செய்துவிட்டார் குஷ்பு.
அரண்மனை படம் மாதிரி ஒரு பேய்க்கதை சொல்லி இருக்கிறார் சுந்தர் சி. சந்திரமுகி வெற்றிப்படத்திற்கு பிறகு இது மாதிரியான படத்தில் நடிப்பதில் ரஜினியும் ஆர்வம் காட்டி இருக்கிறார். கொள்கையின் படி உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, வியாபார ரீதியாக இந்த படத்தை தயாரிக்க உடன்பட்டிருக்கிறார் கமல்.

சுந்தர் சி தான் சொன்ன ஒரு வரி கதையை டெவலப் செய்துவிட்டு சென்று ஒவ்வொரு முறை கமலிடம் சொன்னபோதும் அவர் அதில் கரெக்ட்ஷன் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். இதில் சுந்தர் சி அப்செட் ஆகிக் கொண்டே வந்திருக்கிறார்.
கடைசியாக அறிக்கை வெளியிட்ட அன்று ரஜினியை சந்தித்து கதையைச் சொல்ல அவர் மொத்த திரைக்கதையுமே பிடிக்கவில்லை. வேறு மாதிரி ரெடி பண்ணுங்க என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.
தொடர் ஹிட்களை பார்த்து வரும் சுந்தர் சிக்கு இது வெறுப்பை தந்திருக்கிறது. ரஜினியும் கமலும் மாறி மாறி உதைத்து அடிக்க நான் என்ன பந்தா? என்று ஆத்திரப்பட்டு, அந்த ஆத்திரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சுந்தர் சி மட்டும் அறிக்கை வெளியிடாமல் இருந்து தனது பக்க வறுத்தத்தை சொல்லி இருந்தால், கதையில் சமரசம் செய்துகொண்டே, அல்லது வேறு சிலரை வைத்து திரைக்கதையை தயார் செய்தோ படப்பிடிப்பை தொடங்க வைத்திருப்பார் கமல். ஆனால் தயாரிப்பாளரான தன்னிடமே சொல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததால் சுந்தர் சியை அழைத்து பேச அவருக்கு மனசில்லை.
இதே மனநிலையில்தான் இருந்துள்ளார் ரஜினி. தனக்காக படம் செய்துகொடுக்க வந்த ரஜினிக்கு இந்த நிலை வந்துவிட்டதே, அவருக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்ற தர்மசங்கடத்தில் கமல் இருந்தபோது, ரஜினியே போன் செய்து, கவலைப்படாதீங்க கமல்… வேறு ஒரு டைரக்டரை பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
இதன் பின்னர் ரஜினிக்கு பிடித்த மாதிரி வேறு ஒரு கதை கேட்டுக் கொண்டிருக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.
கமல்ஹாசனும், ‘’நான் தயாரிப்பாளர். என் நட்சத்திரம் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்பேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.
‘’கதை நன்றாக இருந்தால் புதியவர்களுக்கும் வாய்ப்பு உண்டு’’என்று அவர் சொல்லி இருப்பதன் மூலமே, சுந்தர் சி கதையில் சொதப்பி இருப்பதுதான் நடந்த பிரச்சனைக்கு காரணம் என்று தெரியவருகிறது.

தக்லைப் படத்தின் தோல்வியினால்தான் அந்த தோல்வியை ஈடுகட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு படம் நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. கூலி படத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் கதை விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறார் ரஜினி. அதனால்தான் லோகேஷ் கனகராஜ் சொன்ன கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் கதையில் திருப்தி இல்லாமல் வேறு கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி. கமலும் அவர் ஒரு பக்கம் அந்த படத்திற்கான கதையையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதில் கதை விசயத்தில் ரஜினி – கமல் செய்ததில் நியாயம் இருக்கிறது என்றே கருதுகின்றனர் ரசிகர்கள்.
