
ரவுடிசத்தை விரும்புகிறாரா விஜய்? என்று கொந்தளிக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்ட தவெகவினர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தவெக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளா சபின். இவரை மா.செ.வாக அறிவித்ததில் இருந்து கொந்தளிக்கிறது குமரி தவெக.
கடந்த 2018 ஆம் ஆண்டு காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் ‘ஏ1’ குற்றவாளி சபின் என்ற தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. செயின் பறிப்பிலும் குற்றவாளி என்று சபின் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. சாதிபற்றிலும் உச்சத்தில் இருக்கும் ரவுடியாக வலம் வருகிறார் சபின். இவருக்கு எப்படி கட்சி தலைமை மா.செ. பொறுப்பை வழங்கியது.

ஒருவரின் பின்னணியை விசாரிக்காமல் எப்படி இதுபோன்ற கட்சி பொறுப்பை வழங்கலாம்? என்று கொந்தளிக்கும் குமரி தவெகவினர், தங்களின் கொந்தளிப்பை ஆடியோவாக பதிவு செய்து அதை குமரி மாவட்ட தவெக வட்டாரத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்டவரும், போலீசை அடித்தவரும், சாதிபற்றின் உச்சத்தில் இருப்பவருமான சபினுக்கு கட்சியில் மா.செ. பதவியா? சாதிபற்றின் உச்சத்தில் இருக்கும் ரவுடி சபினுக்கு கட்சியில் மா.செ. பதவி கொடுத்திருப்பது குமரி மாவட்டத்தில் கட்சி அழிவை நோக்கி பயணிக்க காரணமாகிறது. குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு பதவியில்லை என்ற அறிவிப்பு என்னவானது? என்று கேட்டு தவெக தலைவர் விஜய்க்கும் கடிதம் எழுதி இருக்கின்றனர் குமரி தவெகவினர்.

அக்கடிதத்துடன் சபின் மீதான எப்.ஐ.ஆர். நகல்களையும் அனுப்பி இருக்கின்றனர்.
இந்த கடிதம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைக்கு கிடைத்திருக்கிறது.
குமரியில் நடக்கும் இந்த உள்கட்சி மோதலைப்பார்த்து, ஒரு ரவுடிக்கு மா.செ. பதவி வழங்கி இருப்பதால், மற்ற மாவட்ட மா.செ.க்கள் குறித்தும் சந்தேகம் எழுந்திருக்கிறது குமரி மக்களுக்கு. ரவுடிகளின் கூடாரமா தவெக? என்ற கேள்வியும் அவர்கள் எழுப்புகின்றனர்.