பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நடிகை கஸ்தூரி .
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு வலைத்தளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
’’காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. ஒருவரின் உணர்வை அழிப்பதும் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலைதான். அப்படி தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எத்தனை ஆண்டுகளாக இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா?’’ என்ற கேள்வியை எழுப்பிய கஸ்தூரி,
’’பிறப்பு முதல் இறப்பு வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் முக்கியமானதாக இருக்கும் ஒரு குலத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் யார் செத்தாலும் கருமாதி பண்ணுறதுக்கு ஐயர்கள் இருப்பாங்களா?ங்கிற கவலை வந்திருக்கிறது எனக்கு. என்னோட இந்த கவலை இந்து சமுதாயத்தின் கவலை’’ என்கிறார்.
’’பிராமணர்கள் வந்தேறிகளா? பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள்? ’’ என்று கேட்கும் கஸ்தூரி,
’’வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொன்னது வெள்ளைக்காரனை அல்ல. ஐயர், ஐயங்கார்களைத்தான் அப்படி சொன்னார்கள்’’ என்று புது விளக்கம் தருகிறார்.
’’பிராமணர்கள் சமூகம் சாத்வீகமானவர்கள் என்று சொல்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் உயிரை இழந்த பலர் அந்தனர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்பது உண்மை’’ என்று பிராமணர்களின் பெருமை சொல்லும் கஸ்தூரி, ஐயர் , ஐயங்கார்களே இன்று ஏன் நாங்களும் பொய் சொல்லுவோமே என்று போய் நிற்கிறார்கள். ஏன் நாங்களும் குடிப்போமே என்று போய் நிற்கிறார்கள்’’ பிராமணர்களின் தவறையும் சுட்டிக்காட்டுகிறார்.