பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள சினிமாவை உலுக்கி எடுத்திருக்கிறது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்பட 15 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டில் தொடுபுழாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ஜெயசூர்யார் தன்னிடம் தவறாக நடந்துகொண்டாத கூறியிருக்கிறார் நடிகை ஒருவர். கடந்த 2017ம் ஆண்டில் நடிகை கடத்தப்பட்ட வழக்கும் பெரிதானது.
தற்போது மலையாள சினிமாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளால் அதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் நடந்திருக்கின்றன. படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகச்சொல்லி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மலையாள சினிமா மட்டுமல்லாது எல்லா மொழி சினிமாவிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி இயக்குநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள சினிமாவின் இளம் நடிகர் நவஜீத் நாராயணன் மலையாள மனோரமா நியூஸ்க்கு அளித்துள்ள பேட்டி அதிரவைக்கிறது.
வாய்ப்பு கேட்டு அந்த இயக்குநர் வீட்டிற்கு சென்றபோது தன்னை உட்காரவைத்து, தன் தொடையை பிடித்து இழுத்து, வாய்ப்பு கொடுத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டதாகவும், அவர் கேட்டதை புரிந்து கொண்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நடிகைகளுக்கு மத்தியில் நடிகரும் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதனால்தான் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, ஆண்களும் இதை எதிர்கொண்டாலும், அதைச் சுமப்பது ஓரளவு பெண்கள்தான் என்கிறார்.