கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. ஆல்பா என்றுதான் முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் பீட்டா, டெல்டா என்றும், டெல்டா பிளச், ஒமிக்ரான் என்றும் பல வகையில் உருமாற்றம் அடைந்தது.
ஒமிக்ரான் வைரஸ் மட்டும் 100க்கும் மேலாக உருமாற்றம் பெற்று பல நாடுகலில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்திருக்கும் புதிய வகை கொரோனா வைர கேபி.2.
சிங்கப்பூரில் கேபி.2 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய வைரஸ் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இதனால் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், ‘’கேபி.2 வைரஸ் இந்தியாவில் 11 மாநிலத்தில் பரவுகின்றன. தமிழகத்தில் இந்த வகை கொரோனா வைரசின் பாதிப்பு தென்படுகிறது. ஆனாலும் அது கட்டுக்குள் இருக்கிறது.
ஒரு மாதத்திற்கும் மேல் 10க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இதில் ஒரு பாதிப்பின் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்’’ என்கிறார்.
புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் 11 மாநிலங்களில் பரவி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே நேரம் இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு கொரோனா வைரஸ் அலை வரக்கூடிய வாய்ப்புள்ளது என்கிறார் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்.
அவர் மேலும், இந்த வைரஸ் ஒமைக்ரானின் மற்றொரு வகைதான். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்.
அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுருத்துகிறார். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் , இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இது மாதிரியான வைரஸ்களை சமாளிப்பதற்கு தேவையான கட்டமைப்பு தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையிடன் உள்ளது என்று சொல்லி ஆறுதல் அளிக்கிறார்.
அதே நேரம், இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு கொரோனா வைரஸ் அலை வரும் வாய்ப்பு உள்ளது . ஆனாலும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்று நம்பிக்கை அளித்திருக்கிறார்.