கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி அம்முகாம்களில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது தப்பி ஓடியபோது கால் முறிந்து சிக்சை பெற்று வந்தார் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன்.
கைதுக்கு முன்பாக அச்சத்தில் எலி பேஸ்ட் திண்றதிலும் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இதில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவரின் தந்தை நேற்று சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர்களின் மரணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பி இருக்கிறார். பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கொல்லப்பட்டிருப்பாரோ சிவராமன்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இதற்கு திருச்சி சூர்யா, ‘’சிவராமன் கைது செய்யப்பட்டபோது அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத அண்ணாமலை இப்போது அவர் மரணம் அடைந்ததும் ஏன் கண்டனம் தெரிவிக்கிறார்?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.
’’உங்க வீட்டு பிள்ளைகளுக்கு நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா?’’என்று கேட்கும் சூர்யா, பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாஜகவினரை காப்பாற்றி வந்தது போன்று பழக்க தோசத்தில் அடுத்த கட்சி பாலியல் குற்றவாளிக்கும் வக்காலத்து வாங்குகிறார் அண்ணாமலை’’ என்று கூறியிருக்கிறார்.
’’பெண்களுக்கு ஏதாச்சும் ஒன்று என்றால் கையை வெட்டுவோம் காலை வெட்டுவோம் என்று மேடைகளில் பேசக்கூடிய அண்ணாமலையும், சீமானும் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’’ என்றும் எச்சரித்திருக்கிறார் சூர்யா.