ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் நிறுவிய AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Krutrim, 1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை திரட்டி நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு(AI) யுனிகார்ன் நிறுவானாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், இந்தியாவில் மிக வேகமாக யுனிகார்ன் நிறுவனமாக Krutrim மாறியுள்ளதாக, அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் “செயற்கை” என்று பொருள்படும் Krutrim, அனைத்து இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளும் வகையிலும், Voice-Enabled உரையாடல்களை அளிக்கும் வகையிலும் புதிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை உருவாக்குவதில் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் உருவாக்கிய புதிய ChatBot-ன் பீட்டா பதிப்பை அடுத்த மாதம் நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
AI Compute-டிற்கு உகந்த Chip-களை தயாரிக்கும் திறனை உள்நாட்டிலும் உருவாக்கவும், Krutrim திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Krutrim நிறுவனம், பவிஷ் அகர்வாலின் மூன்றாவது நிறுவனமாகும். Ola நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கிய அகர்வால், போக்குவரத்து வலை சந்தையில் அந்நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்திய பெருநிறுவனமான ரிலையன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் Nvidia-வுடன் இணைந்து, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பயிற்சியளிக்கப்பட்ட பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. ஆனால் இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.