உலகிலேயே முதல்முறையாக இரு டிஸ்ப்ளே ஸ்கிரீன் (Display Screen) கொண்ட லேப்டாப் அறிமுகப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு Display-களை தனித்தனியாக பிரித்தேடுக்க கூடிய Keyboard device-உடன் புதிய ரக லேப்டாப் சாதனத்தை ASUS நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ASUS Zenbook DUO Laptop சாதனம், 5 விதமாக பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் மோட் (Laptop mode), டூயல் ஸ்கிரீன் மோட் (Dual screen mode), டூயல் ஸ்க்ரீன் கீபோர்ட் மோட் (Dual Screen Keyboard Mode), டெஸ்க்டாப் மோட் (Desktop Mode) மற்றும் ஷேரிங் மோட் (Sharing Mode) போன்ற அம்சங்களுடன் உள்ளது.
ஒருபுறம், வழக்கமான லேப்டாப் சாதனம் போல ஒரு Display மற்றும் ஒரு Keyboard உடன் பயன்படுத்தலாம். மறுபுறம், இரண்டு Display-வையும் பிரித்து பெரிய டிஸ்பிளேவாக மாற்றி பயன்படுத்தலாம்.
Keyboard-ஐ லேப்டாப்பில் இருந்து தனியாக கீழே பொருத்தியோ அல்லது பிளோட்டிங் கீபோர்ட் (Floating keyboard) சாதனமாகவோ பயன்டுத்தலாம்; இதை நீங்கள் டூயல் டிஸ்பிளே டேப்லெட் (Tablet) போல பயன்படுத்தலாம்.
1.35 கிலோ எடையுள்ள Zenbook DUO, சிறந்த இயக்கத் திறன் கொண்ட சாதனாக உருவாக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் வரும் இரண்டு Display-வும் 14″ இன்ச் 3K 120 Hz ASUS Lumina OLED-உடன் வருகிறது. 180° (Hinge) வளையும் தன்மை கொண்டுள்ளது.
ASUS ScreenXpert மென்பொருளால் நிர்வகிக்கப்படும் இந்த லேப்டாப் Intel Core Ultra 9 processor-உடன் வருகிறது.
இந்த லேப்டாப் உடன் வரும் Keyboard சாதனம் ஒரு ப்ளூடூத் கீபோர்ட் (Bluetooth keyboard) என்பதனால், இதை எப்போது வேண்டுமானாலும் பிரித்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல், இந்த லேப்டாப்பில் இருக்கும் மற்றொரு டிஸ்பிளேவையும் நீங்கள் விர்ச்சுவல் கீபோர்ட் சாதனமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது 13.5 மணிநேர பேட்டரி ஆயுளுடன் டால்பி அட்மாஸ் சவுண்ட் (Dolby Atmos Sound) உடன் வருகிறது. இந்த லேப்டாப் சவுண்ட் சிஸ்டத்தை ஹர்மான் கார்டன் (Harman Kardon) டியூன் செய்துள்ளது.
Published by அசோக் முருகன்