திரிணமூல் கட்சிக்கு உரிய முக்கியத்தை காங்கிரஸ் கட்சிக் கொடுக்காவிட்டால், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளிடம் இவ்வாறு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
RSP, சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் காங்கிரஸ் கட்சி கொடுத்தால், தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் போராடி வெற்றி பெற தயாராக இருக்க வேண்டும், என மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் தொகுதி பங்கீட்டுக்காக நாங்கள் பிச்சை எடுக்க மாட்டோம், என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.