பவர் கட் ஆனதும் காத்து வாங்க கதவைத்திறந்து எல்லோரும் வெளியே வந்தபோது ஒரு பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது கண்டு அதிர்ந்தனர்.
பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டில் மகாலட்சுமி என்ற பெண் மட்டும் தனியாக வசித்தது தெரியும் என்பதால், அவரது தாய்க்கும் சகோதரிக்கும் விபரம் சொல்ல, அவர்கள் வந்து மாற்றுச்சாவி மூலம் கதவைத்திறந்த போது வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்தே துர்நாற்றம் வீசியது.
பிரிஜ்ஜை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அதில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் இருந்தது. அது மகாலட்சுமிதான் என்று தெரிந்ததும் தாயாரும் சகோதரியும் கதறி துடித்தனர்.
உடனே வயாலிக்காவல் பைப்லைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் விரைந்து வந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
பிரிட்ஜ்ஜில் இருந்த உடல் பாகங்களை எடுத்தனர். மொத்தம் 30 பாகங்கள் இருந்தன. அந்த உடல் துண்டுகளில் புழுக்கள் நெளிந்துள்ளன.
உடல் துண்டிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், அப்பகுதியில் அடிக்கடி பவர் கட் ஆகும் என்பதால் உடல் பாகங்கள் கெட்டுப்போய் புழுக்கள் உருவாகி நாற்றமெடுத்திருக்கிறது என்பதை போலீசார் அறிந்தனர்.
வீடு முழுவதும் ஆய்வு செய்ததில் ரத்தக்கறை எங்கேயும் இல்லை. இதனால், வேறு எங்கேயும் கொலை செய்து இங்கே வந்து உடல் வைக்கப்பட்டதா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமி நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், கணவர், பிள்ளைகளை பிரிந்து கர்நாடகம் வந்து பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேலை செய்துக்கொண்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது தெரியவந்தது.
தினமும் காலையில் ஒரு இளைஞர் மகாலட்சுமியை பைக்கில் அழைத்துச்செல்வதும், மாலையில் கொண்டு வந்துவிடுவதும் தெரியவந்ததால், போலீஸ் விசாரித்ததில் சலூன் கடையில் வேலை செய்து அந்த இளைஞரின் செல்போன் 10 நாட்களுக்கு மேல் ஆப் ஆகி இருப்பதால் அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மகாலட்சுமி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்டிருக்கும் 6 தனிப்படைகளில் சந்தேகத்தின் பேரில் மகாலட்சுமியின் கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.