மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், அரியானா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நேற்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அரியானாவில் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒரே கட்டமாகவும், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18,25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநிலத்திற்குமான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஏன் அப்படி அறிவிக்கப்படவில்லை? அரியானா தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, ‘’ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் முடிந்ததும் மகாராஷ்டிரா தேர்தல் நடத்தப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.
அரியானா, ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் இதற்காக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.