மணிப்பூர்: தங்களுக்கிடையே பொருளாதார தடைகளை விதித்துக் கொண்ட மெய்தெய் மற்றும் குகி இன அமைப்பினர்!
🔹சுராசாந்த்பூர் மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்ப அல்லது விற்க தடை விதித்து பிற மெய்தேய் அமைப்பினரின் ஆதரவுடன் ‘மெய்தேய் ஒருங்கிணைப்பு கமிட்டி’ உத்தரவிட்டுள்ளது
🔹முன்னதாக, தெங்னோபால் மாவட்டம் மோரே பகுதியில் பணியமர்த்தப்பட்ட மணிப்பூர் மாநில போலீஸாருக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய குகி இன அமைப்பு ஒன்று மறுத்திருந்தது
🔹இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இம்பால் பள்ளத்தாக்கில் இருந்து அத்தியாவசிய பொருள்களை குகி இன மக்களுக்கு செல்வதை மெய்தேய் இன அமைப்புகள் தடுத்து வருகின்றனர்
🔹மேலும், தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த மெய்தேய் இன அமைப்பு ஒன்று, தெங்னோபால் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது