இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டத்தில் பங்களாதேஷில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தன் உயிருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் ஷேக் ஹசீனா.
இதனால் பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி, விரைவில் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் பங்களாதேஷ் என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமரின் இந்த எண்ணத்திற்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
‘’பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொல்லும் பிரதமர், இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ததில்லை’’ கடுமையாக விமர்சித்திருக்கிறார்.