இரண்டு வயது குழந்தை உள்பட பெண்களிடன் பாலியல் சீண்டல்கள் செய்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்துள்ளார் இந்திய மருத்துவர். அவரின் இந்த இழி செயலை மனைவியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் உமைர் அஜாஸ், கடந்த 2011ம் ஆண்டில் பணி விசாவில் அமெரிக்காவுக்கு சென்று பல மருத்துவமனைகளி வேலை செய்து வந்துள்ளார்.
நாற்பது வயதை தாண்டிய இந்த மருத்துவர் குறித்து அவரது மனைவி அண்மையில் ஒரு அதிர்ச்சி புகார் அளித்திருந்தார். குழந்தைகளையும், பெண்களையும் ஆடையில்லாமல் செய்து பாலியல் சீண்டல் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் தன் கணவர் என்றும், கணவரது பென் டிரைவில் 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் சொல்லி அந்த பென் டிரைவ்வினையும் போலீசில் ஒப்படைத்திருந்தார்.
போலீசாரின் விசாரணையில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மயக்கத்தில் இருக்கும்போது அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனையின் கழிவறை, செவிலியர்கள் உடைமாற்றும் அறை போன்றவற்றில் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார் அந்த மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மருத்துவர் உமைர் அஜாஸ் கைது செய்யப்பட்டு ஓக்லாந்து கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
புகார்களை பெற வேண்டும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் அதிகம் உள்ளதால், அந்த மருத்துவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது போலீஸ்.
மருத்துவரிடம் இருந்து பென் டிரைவ் மட்டுமல்லாது ஐ போன் மற்றும் டிவைஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அதிலும் ஏராளமான வீடியோக்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.