குக்கிராமங்களையும் இணைக்கின்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் முதல் மீண்டும் மினி பஸ் சேவை தொடங்குகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 1996ல் கிராமப்புற பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கும் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் கிராமப்புற பகுதிகளில் இதற்கான அனுமதி நிறுத்தப்பட்டு விட்டது. சென்னையில் மட்டும் மினி பேருந்துகள் சேவை உள்ளன.
கிராமப்புறங்களில் நின்று போன அந்த மினி பஸ் சேவையினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதை முன்னிட்டு விரிவான மினி பஸ் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிட்டப்பட்து. அதன்படி, டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து இயக்கம் தொடங்கும் முயற்சியில் போக்குவரத்து துறை மும்முரமாக உள்ளது.
இதையடுத்து வழித்தடங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்தில் 100 குடும்பங்கள் இருந்து அங்கு இதுவரையிலும் பேருந்து சேவை இல்லாது இருந்தால் அங்கே மினி பஸ் சேவை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 25 கிலோ மீட்டருக்குள் இந்த மினி பஸ் இயக்கப்பட இருக்கிறது. இந்த மினி பஸ் 25 பேர் அமரும் விதத்தில் அமையவிருக்கிறது.
இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர்களிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.