கோவையில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13 புதிய அறிவுப்புகளை வெளியிட்டார்.
- உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மறு சீரமைக்கப்படும்
- தென்னை வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றுவதற்காக ரூ.14 கோடியே 4 லட்சம் நிதி
- ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்
- ரூ.10 கோடி மதிப்பில் ஆர்.எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய ஹாக்கி விளையாட்டுத்தரை
- விளாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு சாலை வரை ரூ.9 கோடி மதிப்பில் புதிய சாலை
- காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 கோடியில் சாலை அமைத்து தரப்படும்
- 2.8 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்
- வார்டு எண் 11, மூங்கில் மரக்குட்டை பகுதியில் ரூ.57 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் (ம) வடிகால்
- தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்
- தென்னை விவசாயப் பெருமக்கள் பயன்பெற மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் உரிய நடவடிக்கைகள்
- 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலைக்கடைகள், 14 சமுதாய நலக்கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்
- பெரியநாயக்கன்பாளையம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும்
- வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர்த்தொட்டி
என 13 புதிய நலத் திட்ட அறிவிப்புகளை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.