முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவர் அல்ல என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இது வதந்தி என்று அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அலுவலகம் சென்னையில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அலுவலகம் இருக்கும்போது எதற்கு அமெரிக்கா சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டும்? என்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
டிரில்லியண்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவை தவிர கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், கொலம்பியா நாடுகளில் மட்டுமே அலுவலகங்கள் இருக்கின்றன. சென்னையில் தற்போது வரைக்கும் இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி மையமோ, அலுவலகமோ எதுவும் இல்லை. ஆனால், இருப்பது போன்று பரவும் புகைப்படத்தில் அந்த நிறுவனத்தின் ஆன் – சைட் பணிக்கானது என்று தமிழ்நாடு அரசு விளக்கத்தை அளித்தது.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தின் போது எடுத்த புகைப்படத்தில் முதல்வருடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவர் அல்ல, அதாவது டிரில்லியண்ட் நிறுவனத்தின் சேர்மன் andy white, படத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இருப்பது jim madej , viridi நிறுவனத்தின் ccoo . அவருக்கும் டிரில்லியண்ட் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற செய்திக்கும் அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
ஜிம் மடேஜ் சமீபத்தில் தான் டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதனால் அவர் குறித்த விபரங்கள் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. ஆனால், அவர் அருகே இருக்கும் மைக் மோர்ட்டிமர் குறித்த விபரங்களை அந்நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் காணலாம் என்று விளக்கத்தில் தெரிவித்திருக்கிறது அரசு.