தன் கணவர் ஏ.ஆர்.ரகுமாமனை பிரிவதாக சாய்ராபானு அறிவித்த அதே நாளில் ரகுமானுடனுன் பணிபுரியும் இசைக்கலைஞர் மோகினிடேவும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.
இதனால் ரகுமான் – சாய்ராபானு விவாகரத்துக்கு மோகினிடே தான் காரணம் என்று செய்திகள் பரவின. இதை ரகுமானின் மகன் அமீன் மறுத்தார். தனது தந்தையையும் மோகினிடேவையும் இணைத்து வைத்து பரவும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று வேதனை தெரிவித்தவர், இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ரகுமானோ, தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான தவறான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு அல்லாமல, அந்த அவதூறு பரப்பும் வீடியோக்களை நீக்கம் வேண்டும் . இல்லாவிட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
தன் கணவர் மேல் எந்த தவறும் இல்லை. அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சாய்ராபானுவே கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மோகினிடே தானே முன் வந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள வீடியோ விளக்கத்தில், அடுத்தர்களின் தனிப்படட்ட விசயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஜாம்பவான். அவரது
இசைக்குழுவில் சிறு வயது முதற்கொண்டே இருந்து வருகிறேன். கிட்டத்தட்ட 8.5 வருடங்கள் அவருடன் இசைப்பயணம் சென்றிருகிறேன். அவர் எனக்கு அப்பா மாதிரி. இன்னும் சொல்லப்போனால் என் அப்பா வயதை விடவும் அவர் வயது அதிகம். ரகுமானின் மகள் வயதுதான் என் வயதும்.
இந்த விவகாரத்தில் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் என் தனிப்பட்ட வாழ்க்கையை தொந்தரவு செய்யும் விசயங்களை அப்படியே விட்டு கடந்து செல்ல மனவில்லை. அதனால் தான் சொல்கிறேன். பிறரின் தனியுரிமையை மதித்து நடந்துகொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.