2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், இந்தியாவில் பணப் புழக்கம் இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த 2017 மார்ச் மாதம் 13.35 லட்சம் கோடி ரூபாய் ரொக்கப் பணம் புழக்கத்தில் இருந்த நிலையில், 2024 மார்ச் மாதம் நிலவரப்படி சுமார் ரூ.35.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
HSBC PMI மற்றும் CMS பணக் குறியிடுகளின் படி, 2023-24 நிதியாண்டில் ATM-களில் இருந்து பணம் எடுப்பதில் டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக வளர்ச்சிக் காணப்பட்டுள்ளது.