இந்தியாவில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 25% மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் எளிய வாக்கியங்களைக் கூட சரளமாக படிக்க முடியாத நிலையில் உள்ளது ASER அமைப்பு வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 42% மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள எளிய வாக்கியங்களைப் படிக்க முடியாமல் தினருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கணிதப் பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர் என்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 34,745 மாணவர்களில், சுமார் 43.3% பேர் மட்டுமே மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்கும் திறனைக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டில் 90% மாணவர்கள் தங்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். அதில் 43.7% மாணவர்கள் மற்றும் 19.8% மாணவிகள் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளதாக ASER அமைப்பு வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.