எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரின் எச்சங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப்படக்குழு இதை கண்டறிந்து அறிவித்துள்ளது.
கடந்த 1924ஆம் ஆண்டில் உலகின் மிக உயரிய மலையான எவரெஸ்ட் மலையின் உச்சியை தொட வேண்டும் எனும் வேட்கையில் ஜார்ஜ் மல்லோரி மற்றும் பிரிட்டன் ஆண்ட்ரு இர்வின் இருவரும் சென்றனர். கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் உயரத்திஉல் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியின் போது இருவரும் காணாமல் போனார்கள்.
இதன் பின்னர் 1999ஆம் ஆண்டில் ஜார் மல்லோரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 100 ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டன் ஆண்ட்ரூ இர்வின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கால நிலை மாற்றத்தின் காரணமாக இமயமலையைச் சுற்றி இருக்கும் பனி உருகிவருகிறது. இதனால் எவரெஸ்ட் மலை ஏறும் முயற்சியில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடிகிறது என்று தெரிவித்துள்ளது நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப்படக்குழு .
இந்த ஆவணப்படக்குழு ஒரு பூட்ஸைக் கண்டுபிடித்துள்ளன. அந்த பூட்ஸின் உள்ளே இருந்த காலுறையில் ஏ.சி.இர்வின் என்ற சிவப்பு லேபிள் இருந்துள்ளது. அது காணாமல் போன இர்வின் எச்சங்கள்தான் என்பதை கண்டறிந்துள்ளனர்.
1920ல் இருந்து 300க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்துள்ளனர். இர்வின் காணாமல் போனபோது அவரது வயது 22. 8.6.1924ல் காணாமல் போன இர்வின் எச்சங்கள் 2024ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளன.
மேற்கொண்டு இது இர்வின் எச்சங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த இர்வின் குடும்பத்தினர் டி.என்.ஏ. மாதிரிகளை வழங்கி இருக்கிறார்கள்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த மனித எச்சத்தை ஆராய்வதன் மூலம் இர்வின் மற்றும் மல்லோரி இருவரும் சிகரத்தின் உச்சியை அடைந்தார்களா? என்பது தெரியவரும்.
1953ல் எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நோர்கே எவரெஸ் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தவர்கள். ஒருவேளை ஆய்வின் மூலம், இர்வின் மற்றும் மல்லோரி இருவரும் அதற்கு முன்பே அந்த சாதனையை நிகழ்த்தி விட்டார்களா? என்பதும் தெரியவரும்.