இந்து மத ஊர்வலத்தில் எச்சில் துப்பியதாக பொய் வழக்குப் பதிந்து 3 சிறுவர்களை பல மாதங்கள் சிறையில் அடைத்து, சட்டவிரோதமாக அவர்களது வீட்டை இடித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2023 ஜூலை மாதம், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்து மத ஊர்வலத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஊர்வலத்தின் போது முஸ்லிம் சிறுவர்கள் 3 பேர் எச்சில் துப்பியதாக இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த பொய் புகாரின் பேரில், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட மூவரில் 15 வயது சிறுவர்கள் இருவரும் 18 வயது நிரம்பிய Adnan Mansoori என்பவரையும் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்தனர்.
அடுத்த 2 நாட்களில் Adnan Mansoori-யின் வீடு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறி அவரின் தந்தையிடம் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் சட்டவிரோதமாக வீட்டை இடித்தனர்.
நோட்டீஸுக்கு பதிலளிக்க முறைப்படி கால அவகாசம் கொடுக்காத அதிகாரிகள், 30 நிமிடங்களில் மேளதாளத்துடன் வீட்டை இடித்துள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பல்வேறு கட்டங்களாக சிறுவர் நீதிமன்றம் விசாரித்த நிலையில், 15 வயது சிறுவர்கள் இருவருக்கும் பிணை வழங்க மறுத்தது.
இந்து மத ஊர்வலத்தில் எச்சில் துப்பியதாக பொய் வழக்குப் பதிந்து 3 சிறுவர்களை பல மாதங்கள் சிறையில் அடைத்து, சட்டவிரோதமாக அவர்களது வீட்டை இடித்த கொடூரம்!
— Spark Media (@SparkMedia_TN) January 15, 2024
🔹கடந்த 2023 ஜூலை மாதம், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்து மத ஊர்வலத்தில் இச்சம்பவம்… pic.twitter.com/xeQzZX38r3
இதை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், செப்டம்பர் 19 அன்று இரு சிறார்களுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில், இந்த வழக்கின் புகார்தாரரும் சாட்சியும் FIR-ல் என்ன இருக்கிறது என்பதே எங்களுக்கு தெரியாது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
புகார் ஒன்றில் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டதாகவும், முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது என்று கூறியுள்ளனர்.
இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட Adnan Mansoori என்பவருக்கு சுமார் 151 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 15 அன்று உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.