நடிகர் நாகார்ஜுனா புகாரினை வாபஸ் பெற்றதை அடுத்து தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீதான வழக்கை முடித்து வைத்தது தெலுங்கானா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடித்து வைத்தது.
தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேசிய பேச்சு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் புயலைக் கிளப்பியது. சமந்தா – நாகசைதன்யா விவகாரத்திற்கு காரணமே கே.டி.ஆர்.தான் என்று சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு தெலுங்கு திரையுலகம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.

அரசியல் பிரச்சனையில் பி.ஆர்.எஸ். கட்சித்தலைவர் கே.டி.ராமராவை விமர்சிக்கும் போது ஒரு குடும்பத்தின் பெயரை தவறாக விமர்சித்துவிட்டேன். மற்றபடி யார் மீதும் எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என்று சொல்லி தனது பேச்சை வாபஸ் பெற்றார் அமைச்சர் சுரேகா.
ஆனாலும் ஆத்திரம் தீராத நாகார்ஜூன், சுரேகா மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தின் விசாரணையில், நாகார்ஜூனாவையோ, அவரது குடும்ப உறுப்பினர்களையோ காயப்படுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று சொன்ன சுரேகா, எதிர்பாராத விதமாக நடந்து விட்ட அந்த செயலுக்கு வருந்துவதாக தெரித்தார். சமந்தா – நாகசைதன்யா பற்றி பேசியதை திரும்பவும் பெற்றார்.
இதையடுத்து அமைச்சர் சுரேகா மீதான அவதூறு வழக்கை திரும்ப பெற்றார் நாகார்ஜூனா. இதன் பின்னர் சுரேகா மீதான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
