மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றபோது, கோயில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டனர் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா குற்றம்சாட்டி உள்ளார்.
அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த பெண் அதிகாரி, தன்னுடைய மதம் மற்றும் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி கோவில் நிர்வாகம் கேட்டதாக , குறிப்பாக தனது சாதிச்சான்றிதழ் கேட்டதாக சொல்கிறார் நமீதா. அப்போது நமீதாவின் கணவர், தாங்கள் இந்துதான் எனக்கூறியதாகவும், அப்படி என்றால் இந்து என்பதற்கான சான்றிதழ் உள்ளதா எனக்கேட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் நமீதா, நான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில்தான் நடந்தது. இந்தியாவில் எந்த கோயிலிலும் இப்படி என்னிடம் கேட்டதில்லை. ஒரு பிரபலத்திடம் எப்படி நடந்துகொள்வது என்று அந்த பெண் அதிகாரிக்கு தெரியவில்லை. என்னிடம் கடுமையாக நடந்துகொண்ட மதுரை மீனாட்சி அம்மன் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வலியுறுத்தி இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நமீதா.
https://www.instagram.com/reel/C_Hx7WJv4B2/?utm_source=ig_web_copy_link
நமீதாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து, ‘’மீனாட்சி அம்மன் கோயிலில் இந்துக்களை மட்டுமே அனுமதித்து வருகிறோம். அதனால் மேலதிரிகாரிகளிடம் கேட்டு அனுமதிப்பதாக கோயில் மேற்பார்வையாளர் கூறியிருக்கிறார். கோயில் கண்காணிப்பு இணை ஆணையர் கிருஷ்ணனிடம் கேட்ட பின்னர் நமீதாவை கோயிலுக்குள் அனுமதித்தோம்’’ என்று கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.