Netflix நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை இந்திய ரூபாய் மதிப்பின்படி 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகி கைப்பற்றியுள்ளது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தொடக்கம்
வார்னர் பிரதர்ஸ் (Warner Bros) நிறுவனம் 1923-ல் ஹாரி, ஆல்பர்ட், சாம் மற்றும் ஜாக் வார்னர் என்ற நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் திரைப்படத் துறையில் கொடிகட்டிப்பறந்து. பின்னர் தொலைக்காட்சி, அனிமேஷன், வீடியோ கேம்கள் என விரிவடைந்தது. பின்னர், 1990-ல் Time Warner-இன் பகுதியாகி, 2022-ல் Discovery-உடன் இணைந்து Warner Bros. டிஸ்கோவேரி என்ற பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. இந்த நிறுவனம் HBO, CNN, DC Comics போன்ற பல உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளை உள்ளடக்கிய ஒரு முன்னணி உலகளாவிய ஊடக நிறுவனமாக இருந்து வருகிறது.

நூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் நிறுவனம்
இந்த நிறுவனம் நூற்றாண்டுக்கும் மேலாக தரமான படைப்புகளின் மூலம் உலகில் உள்ள நிறைய மக்களின் மனதை வென்றிருக்கிறது. முக்கியமாக டிசி காமிக்ஸ் மூலமாக நிறைய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பேட்மேன், சூப்பர் மேன், அக்வா மேன், வொண்டர் வுமன் என இப்படி நிறைய படைப்புகள் இதில் நிறைந்திருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) நிறுவனம் 1997-ல் ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் DVD-களை அஞ்சல் மூலம் வாடகைக்கு விடும் சேவையை இது வழங்கியது. இதனையடுத்து 2007-ல் ஸ்ட்ரீமிங்கை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், உலகளாவிய OTT தளமாக வளர்ந்தது.மேலும், 2010-களில் கனடா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என விரிவடைந்து, சொந்த தயாரிப்புகளையும் தயாரித்தது. இன்று உலகளவில் பல நாடுகளில் செயல்படும் ஒரு பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறியுள்ளது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்
இந்நிலையில், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தை வாங்க, நெட்ஃப்ளிக்ஸ், காம்காஸ்ட் (Comcast) மற்றும் பாரமவுண்ட் (Paramount) ஆகியவற்றுக்கு இடையேயான கடுமையான ஏலப் போர் நடைபெற்றது.

மேலும், டிஸ்கவரி குளோபல் நிறுவனம் $82.7 பில்லியன் மதிப்பில் பிரிக்கப்பட்டதையடுத்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டதால் இந்திய மதிப்பில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கு (7 lakh 40 thousand crore rupees) இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து, இதை Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. மேலும், திரை உலகில் மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ் இரண்டிற்கும் மிகப்பெரிய போட்டி இருந்து வந்த நிலையில், தற்பொழுது டிசி காமிக்ஸ் Netflix வசமாகிவிட்டதால், இனி நெட்ஃப்ளிக்ஸ் வெர்சஸ் மார்வெல் என்கிற பெயரை அதிகளவில் காணப்போகிறோம்.
