தேர்தலுக்குத் தேர்தல் இரட்டை இலை சின்னம் விவகாரம் அதிமுகவை போட்டு உலுக்கி எடுத்து வருகிறது. இந்த பிரச்சனை இப்போது உச்சத்திற்குச் சென்று விட்டதால் அதிமுகவில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? இல்லை முடக்கப்படுமா? என்ற நிலை இருக்கிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிக்கான காலம் முடியவில்லை. தற்போதும் நான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் சொல்லி வந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கிவிட்டோம். அவருக்கும் அதிமுகவுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று இபிஎஸ் சொல்லி வந்தாலும் இரட்டை சிலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ்சின் பதிலையும் தேர்தல் ஆணையம் கேட்டதில் இருந்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் பழனிசாமி.
ஓபிஎஸ் மூலம் சின்னத்தை வைத்து பாஜகதான் விளையாடிப்பார்க்கிறது என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார் பழனிசாமி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்பதால் அப்போது சின்னத்தை முடக்கிவிடக்கூடாது என்று அவசரமாக தேர்தல் ஆணையத்தை நாடியிருக்கிறார் இபிஎஸ்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை நாட தனக்கு முகாந்திரம் இருப்பதை தெரிந்துகொண்ட ஓபிஎஸ், அவரும் தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாள் தனக்குத்தான் கட்சியின் அதிகாரம் உள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் எனது வசமாக்க வேண்டும். அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இபிஎஸ் வசமிருக்கும் கட்சி தொடர்பான அதிகாரங்களை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுவிட வேண்டும் என்று கூறி மனு அளித்திருக்கிறார்.
இதில் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் இபிஎஸ்.
r1zz34