
கட்சியில் இணைப்பு சாத்தியம் என்பதையே பறைசாற்றுகின்றன பேரவையில் இபிஎஸ் – ஒபிஎஸ்சின் இணைந்த குரல்கள்.
நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை? என்று பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப, ‘’நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டீர்கள்’’ என்று பதிலளித்தார் முதல்வர்.
உடனே, அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்க, மடிக்கணினி திட்டம் தொடர்பாக காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது கே.பி.முனுசாமி பேசியபோது சபாநாயகர் அப்பாவு குறிக்கிட்டுப் பேசியதால், அவருடன் கடும் வாக்குவாதம் செய்தார் முனுசாமி.
காலையில்தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். அதை மெய்ப்பிப்பது மாதிரி கட்சி உறுப்பினர் மாதிரி பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதிலை சபாநாயகரே சொல்கிறார் என்று முனுசாமி சொல்ல, கேள்வி கேட்டால் அமைச்சர்களுக்கு பதில் சபாநாயகரே பதில் சொல்கிறார் என்று இபிஎஸ்சும் கடும் வாக்குவாதம் செய்ய, ’இன்றைக்கு ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறீர்களா?‘ ’’என்று கேட்டார் அமைச்சர் துரைமுருகன்.
இபிஎஸ் – ஓபிஎஸ் பாராமுகமாக இருந்து வரும் நிலையில், இன்றைக்கு சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்ததும், மடிக்கணினி திட்ட வாக்குவாதத்தின் போது இபிஎஸ் கருத்துக்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசியதும் பேரவையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பேரவையில் இணைந்த இந்த குரல்கள் கட்சியிலும் இணைந்த கைகளாகிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
02uu5m