ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தி சாதித்து விட்டது பாஜக.
ஒடிசாவில் பிஜேடியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பவர் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த வி.கே.பாண்டியன். பிஜேடி அங்கே 6வது முறையாக ஆட்சி அமைக்க பெரிதும் பாடுபட்டார் பாண்டியன். இது பாஜகவுக்கு பாதகமாக அமையும் என்பதால், ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதா? என்று மோடி, அமித்ஷா, ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பாஜகவினர் ஒடிசா மக்களிடையே தமிழரை விரோதிகளாகா காட்டினர்.
ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் கஜானாவின் சாவி பாண்டியனிடம் இருப்பதாக, அதை சூசகமாக அந்த சாவி தமிழரிடம் இருக்கிறது என்று விமர்சித்தார் மோடி. அதாவது தமிழர்களை திருடர்கள் என்கிற அளவுக்கு அவர் கடுமையாக இழிவுபடுத்தினார்.
பாண்டியனை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழ் பண்பாட்டினையும், தமிழர் கலாச்சாரத்தையும் இழிவுபடுத்தியது பாஜக. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரச்சாரத்தில் தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி, அதன் மூலம் ஒடிசா மக்களிடையே தழிழர் விரோத மனப்பான்மையை வளர்த்து, பாண்டியனை அந்நியர் எனச்சொல்லி மக்களை குழப்பி அதில் சாதித்துவிட்டது. மக்களவை தேர்தலுடன் சேர்ந்து ஒடிசாவுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்டது பிஜேடி. பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக-78, பிஜேடி-51, காங்கிரஸ் -14, மார்க்சிஸ்ட் -1, சுயேட்சைகள் -3 பெற்றுள்ளன.
24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகுகிறார். தமிழர் விரோத போக்கை கடைப்பிடித்து ஒடிசாவில் முதன் முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக.
இதற்கு பதிலடியாகவே அமைந்திருக்கிறது தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத பாஜகவின் நிலைமை.